பரங்கிமலை தர்காவில் சந்தனக் குடம் எடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!

சென்னை பரங்கிமலை ராணுவ அலுவலர் பயிற்சி மையத்துக்கு எதிரில் அமைந்துள்ளது ஹஸரத் சையத் ஷா அலி மஸ்தான் ஷமன் ஷா அலி தர்கா. மிகவும் புகழ்பெற்ற இந்த தர்காவில் 128-ம் ஆண்டு சந்தன முபாரக் உரூஸ் திருவிழா நடைபெற்றது. கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில், நேற்று முன்தினம் மாலை சந்தன குடம் ஊர்வலம் நடைபெற்றது.
ஆலந்தூரின் முக்கிய வீதிகளில் இந்த சந்தன குடம் ஊர்வலமாக சென்று வந்தது. சந்தன குடம் ஊர்வலம் தர்காவிற்கு வந்ததும் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது தலையில் சந்தன குடத்தை சுமந்து ஊர்வலத்துடன் சென்றார்.
அதைத்தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
Comments


Click it and Unblock the Notifications