தொடையில் ஆரம்பித்து பாதம் வரை டாட்டூ.. ஷாக் கொடுத்த ஏ.ஆர். ரகுமானின் பேஸ் கிட்டாரிஸ்ட் மோகினி டே
மும்பை: மோகினி தே, கடந்த மாதத்தில் இணையத்தில் அதிகம் வலம் வந்த பெயர்களில் ஒன்று. காரணம் ஏ.ஆர். ரகுமான் அவரது மனைவி சாரா பானுவைப் பிரிய இவர்தான் காரணம், அவர்களின் விவாகரத்துக்கு முழுக்க முழுக்க காரணமே மோகினி தே தான் என, சில விஷமப் பூச்சிகள் இணையத்தில் பதிவிட்டனர். ஆனால் மோகினி தேவோ, ரகுமான் எனக்கு அப்பா போன்றவர் எனக் கூறி ரகுமான் மீதான விமர்சனங்களுக்கும் தன் மீதான விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்தார். மேலும் ஏ.ஆர். ரகுமான் மான நஷ்ட வழக்கு தொடருவேன் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பின்னர், பதிவுகள் நீக்கப்பட்டது.

யாரோ ஒரு சிலர் கிளப்பிவிட்ட ஆதாரமற்ற கருத்துக்கள், ஏ.ஆர். ரகுமானின் பேஸ் கிட்டாரிஸ்ட்டான மோகினி தே குறித்தும் தமிழ் ஆடியன்ஸ்க்கு தெரியவந்துள்ளது. மோகினி தே ஏ.ஆர். ரகுமானின் இசைக்குழுவில் பேஸ் கிட்டாரிஸ்ட்டாக ஒருபுறம் பணியாற்றினாலும், வெளியில் தனது நண்பர்களுடன் இணைந்து, வெளியில் கச்சேரிகளில் கலந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். இவரது இன்ஸ்டாவில், இவர் பல மேடைகளில் தான் பேஸ் கிட்டார் வாசித்ததை வீடியோவாக பதிவிட்டுள்ளார். அதேநேரத்தில், பாடல் பாடிக்கொண்டே பேஸ் கிட்டார் இசைப்பதிலும் இவர் வல்லவர்.

தொடை முதல் பாதம் வரை: இப்படியான நிலையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, மோகினி தே தனது உடலில் பச்சை குத்திக் கொண்டுள்ளார். அதுவும் அவரது இரண்டு கால்களிலும் பச்சை குத்தியுள்ளார். அதாவது அவரது இடது காலின் பக்கவாட்டில், தொடையில் ஆரம்பித்து பாதம் வரை, கடிகாரம், ஒரு புலி, ஒரு பூனை மற்றும் ஒரு ஆந்தை இருப்பதைப்போலவும், வலது காலின் பின் பகுதியில் தொடையில் ஆரம்பித்து கெண்டைக்கால் வரை வாள் இருப்பதைப்போல் பச்சை குத்தியுள்ளார்.

வீடியோ: இது தொடர்பாக அவர் வீடியோ வெளியிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ளதாவது, " ஒருவழியாக நான் பச்சை குத்திக் கொண்டேன். அதுவும் நான் நினைத்ததைப்போலவே பச்சை குத்திக் கொண்டேன். அதற்காகவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது மட்டும் இல்லாமல், இந்த டாட்டூவைக் நான் குத்திக் கொள்ள கிட்டத்தட்ட 20 முதல் 21 மணி நேரங்கள் எடுத்துக் கொண்டது. மொத்தம் மூன்று நாட்கள் செலவு செய்து இந்த டாட்டூவை நான் போட்டுக் கொண்டுள்ளேன். நான் நினைத்ததைபோலவே டாட்டூ போட்டுவிட்டதற்காக நன்றி எனக் கூறியுள்ளார்.

கமெண்ட்: இவரது இந்த டாட்டூ வீடியோவைப் பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டுள்ளனர். காரணம் உடலில் இவ்வளவு பெரிய டாட்டூ ஒருவர் போட்டுக் கொண்டுள்ளது என்பது, குறிப்பாக அதனை மூன்று நாட்களில் தொடர்ந்து போட்டுக் கொண்டு அனைவரயும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். இவரது டாட்டூ வீடியோவப் பார்த்த ரசிகர்கள், கமெண்ட் செக்ஷனில் ஹார்ட்டினையும், ஃபயர் எமோஜியையும் கமெண்ட்டாக பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் சிலர் இதனை பைத்தியகாரத்தனம் எனவும் பதிவிட்டு வருகின்றனர். இவர் ஏற்கனவே தனது கையில் கிட்டாரை பச்சை குத்திக் கொண்டுள்ளார்.



Click it and Unblock the Notifications











