மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் இசைப்புயல்: ஷாருக்கானை இயக்குகிறார்

Recommended Video

ஏஆர்.ரஹ்மான் - ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம்- வீடியோ

மும்பை: நடிகர் ஷாருக்கானை இயக்க உள்ளார் ஏஆர்.ரஹ்மான்.

பதினான்காவது ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நவம்பர் இறுதியில் புவனேஸ்வரில் துவங்க உள்ளது. அதற்காக ஸ்பெஷல் ஹாக்கி ஆந்தம் ஒன்றை ஏஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்கிறார்.

AR.Rahman becomes director again!

ஜெய் ஹோ, செம்மொழி ஆந்தம் போல் இதுவும் மனதில் நின்று முனுமுனுக்க வைக்கும் என்பது தெரிந்த விஷயம் தான்.

இந்த ஆந்தம் பாடலுக்காக பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் கைகோர்க்கிறார் ஏஆர்.ரஹ்மான். இதுகுறித்து ட்வீட் செய்திருந்த ஷாருக்கான், இந்தியாவின் பெருமையோடு சில மணி நேரம் செலவழித்தது பெருமையாக உள்ளது என பதிவிட்டு ரஹ்மான் மற்றும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனை டேக் செய்திருந்தார்.

மேலும் ஹாக்கி என்பது என்னுடைய இதயத்தில் ஒலிக்கும் பாடல். நிச்சயம் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் தொடக்க விழா நிகழ்வில் பங்கேற்பேன். நம்மிடம் திறமையான டீம் உள்ளது. ஹாக்கி உலகக் கோப்பையில் நான் இருப்பதை பெருமையாக நினைக்கிறேன் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த ஹாக்கி ஆந்தம் பாடலை ஷாருக்கானை வைத்து ஏஆர்.ரஹ்மான் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மானுக்கு இயக்குனராக இருப்பது புதிதில்லை. அவர் ஏற்கனவே 'லெ மஸ்க்' என்ற விர்ச்சுவல் ரியாலிட்டி படத்தை இயக்கியுள்ளார். இப்போது ஷாருக்கானை இயக்க தயாராகி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X