ஹேப்பி பர்த்டே ஏ.ஆர். ரஹ்மான்.. காமன் டிபியை வெளியிட்டு வாழ்த்தும் பிரபலங்கள்!
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் 53வது பிறந்தநாள் இன்று (ஜனவரி 6) கொண்டாடப்படுகிறது.
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை தனது இசையால் பல கோடி இதயங்களை வென்றவர் ஏ.ஆர். ரஹ்மான்.
ரஹ்மானின் பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் அவரது காமன் டிபியை வெளியிட்டு வாழ்த்தி வருகின்றனர்.

இசைப்புயலே
1967ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி சென்னையில் பிறந்த திலீப்குமார், திரைத்துறையில் ஏ.ஆர். ரஹ்மானாக வலம் வருகிறார். ஆஸ்கர் விருது, கிராமி விருது, பாஃப்டா, கோல்டன் குளோப், தேசிய விருது, பத்மபூஷன் என எக்கச்சக்க உயரிய விருதுகளை வென்று இசை வானில் பருந்து போல பறந்து வரும் ஏ.ஆர். ரஹ்மானின் 53வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. வாழ்த்துக்கள் இசைப்புயலே!

அம்மா ஆசி வழங்குவார்
கடந்த டிசம்பர் 28ம் தேதி ஏ.ஆர். ரஹ்மானின் அம்மா கரீமா பேகம் இயற்கை எய்தினார். இந்நிலையில், "கடவுள் தான் எல்லாம் என உறுதியாக நம்பும் மகனின் தாயே தெய்வமாகிவிட்டதால்.... இன்னும் எல்லா புகழுக்கும் அவரே ஆசி வழங்குவார். நம் ஊருக்குக் கிடைத்த உலகப் பெருமையை உளமார வாழ்த்துவோம்." என நடிகர் பார்த்திபன் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்டு வாழ்த்தி உள்ளார்.

பிரபலங்கள் வாழ்த்து
இயக்குநர் வெங்கட் பிரபு, இயக்குநர் அஜய் ஞானமுத்து, நடிகர் வசந்த் ரவி, இசையமைப்பாளர் க்ரிஷ், பாடலாசிரியர் விவேக், நடிகை காயத்ரி மற்றும் ஏகப்பட்ட பிரபலங்கள் காமன் டிபியை வெளியிட்டு ஏ.ஆர். ரஹ்மானை வாழ்த்தி வருகின்றனர். உலகில் உள்ள ஏகப்பட்ட ரஹ்மான் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் ஏ.ஆர். ரஹ்மான் பாடல்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்தி வருகின்றனர்.

கொண்டாடுவோம்
இசையால் இத்தனை ஆண்டு காலம் உலக ரசிகர்களை ரசிக்க வைத்த ஏ.ஆர். ரஹ்மானின் பிறந்தநாளை கொண்டாடுவோம் என சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் ஏகப்பட்ட மாஷ் அப் வீடியோக்களையும், ரஹ்மானின் பேட்டி வீடியோக்களையும் பதிவிட்டு இசைப்புயலை வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











