AR Rahman: 120விருதுக்கு பதில் வரல... AR ரஹ்மானுக்கு சப்போர்ட்டா? பார்த்திபனை பஞ்சராக்கிய ப்ளூ சட்டை
சென்னை: ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சரியான ஏற்பாடுகள் இல்லாததால் ஏஆர் ரஹ்மான் மீது ரசிகர்கள் தொடர்ந்து விமர்சனம் வைத்து வருகின்றனர்.

இதனையடுத்து நடிகர் பார்த்திபன், ஏஆர் ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில், பார்த்திபனுக்கு ப்ளூ சட்டை மாறன் காட்டமாக கேள்விக் கேட்டு அவரை பஞ்சராக்கியுள்ளார்.

பார்த்திபனுக்கு ப்ளூ சட்டை மாறன் கேள்வி: ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆகஸ்ட்12ம் தேதி நடைபெறவிருந்த இந்த இசை நிகழ்ச்சி, கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. அதற்கு மாற்றாக கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னை ஈசிஆர் பகுதியில் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொள்வதற்காக சென்னை மட்டுமின்றி கோவை, மதுரை, பெங்களூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். ஆனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சரியான ஏற்பாடுகள் செய்யாததால் ரசிகர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரும் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தனர். மேலும், ஈசிஆர் பகுதியில் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது.

இதனையடுத்து, ஏஆர் ராஹ்மானும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ஏசிடிசி என்ற நிறுவனமும், ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்ததனர். மேலும், இசை நிகழ்ச்சியை காண முடியாத ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பித் தருவதாகவும் உறுதியளித்தனர். இந்த விவாகரத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், ஏஆர் ரஹ்மானின் மிகப் பெரிய இசை மோசடி இதுவென்றும், ரசிகர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் இந்த சர்ச்சைகள் குறித்து நடிகர்கள் கார்த்தி, பார்த்திபன், இசையமைப்பாளர் யுவன் ஆகியோர் கருத்து தெரிவித்ததுடன், தங்கள் ஏஆர் ரஹ்மான் பக்கம் நிற்பதாகக் கூறியிருந்தனர். இதில் பார்த்திபனின் விளக்கம் இன்னொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ட்வீட் செய்திருந்த பார்த்திபன், ◦மறக்குமா நெஞ்சம்' மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் வருத்தத்திற்குரியது. நடத்தியவர்களின் பொறுப்பு அது. திரு ARR தூய்மையான இனிய மனிதர். அவரே மனம் மிக வருந்தி பொறுப்பை தானும் ஏற்றுக் கொள்வதாக முன் வந்திருக்கிறார்."

"அவரின் மென்மையான மனமும் மேன்மையான குணமும் எனக்குத் தெரியும்! என்னுடைய புதிய படத்திற்கு அவர் இசையமைக்கவில்லையேத் தவிர, கும்மிடிப்பூண்டியில் உள்ள அவரது ஸ்டூடியோவில் படபிடிப்பு நடந்த போது அவரது மேனேஜர் திரு சுகந்தனை அழைத்து, "பார்த்திபன் மனம் நோகாமலும் முகம் சுளிக்காமலும் நடந்துக் கொள்ளுங்கள்"எனக் கூறியதாக ராஜ உபச்சாரம் எனக்கு. தான் சம்மந்தப்படாத விஷயத்தில் கூட மற்றவர் மனம் நோகாதிருக்க நினைப்பவர், தான் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாத்த்திற்காக மனம் உடைந்திருப்பார். இனி இன்னும் கவனம் கொள்வார்."
"அவருக்கு நான் மட்டுமல்ல இந்தத் திரையுலகமே துணை நிற்கும். அவரின் இசையை தொடர்ந்துக் கொண்டாடுவோம். Spread positivity!!!" எனக் குறிப்பிட்டிருந்தார். இன்னொரு பதிவில், "நண்பர்களே வணக்கம்! நான் பதிவிடுவென யாவும், நான் அறிந்ததும் நான் உணர்வதும். அக்கருத்து அனைவரையும் திருப்திபடுத்தி விட முடியாது. நான் பதிவிட்டதில் முதல் வரி பொதுமக்களின் இன்னல்கள் வருத்தத்திற்குரியது என்பதே. திரு ARR பணத்தைத் திருப்பிக் கொடுக்க முன்வந்த tweet-ஐ பார்த்த பின்பே இது சுமூகமாக நடைபெற வேண்டும் என்றே என் கருத்தை பதிவிட்டேன்."
"அதிலிருந்த ஒரு வரியை பின்னர் நீக்கிவிட்டேன். காரணம் செய்தி தேவையில்லாமல் திசை திரும்புவதால். நான் மதிக்கும் ஒருவர் என்னை எவ்வளவு மதிக்கிறார் என்பதை கேள்விபடும் போது மகிழ்வாகத்தானே இருக்கும். (So நான் பதிவிடுவது எனக்கு சரியெனப் படுவது) அது தவறென சிலருக்கு படுவதால் அதை நீக்கினேன். மற்றபடி என் வார்த்தைகளும் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். பொதுமக்கள் பட்ட சிரமத்தை பணத்தால் ஈடுகட்டி விடமுடியாது ஆனால் பண நஷ்டத்தையாவது ஈடு செய்ய வேண்டும். என்பதே என் விருப்பமும். திரு ARR நல்ல மனம் படைத்தவர். தவறுக்கு தானே பொறுப்பு எடுத்துக் கொள்வதாக சொல்லியிருப்பதாலும் தான் அவருடன் துணை நிற்பதாக பதிவிட்டேன்.நல்லது நடக்கட்டும்! நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பார்த்திபனின் இந்த டிவீட்டர் பதிவுக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி கொடுத்துள்ளார். ஏற்கனவே ஏஆர் ரஹ்மானுக்கு திரை நட்சத்திரங்கள் ஏன் இப்படி முரட்டு முட்டு கொடுக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பியிருந்தார். தற்போது, "அந்த 120 சர்வதேச விருது வாங்குனதுக்கு ஆதாரம் கேட்டு.. ஒரு வருசமாகியும் பதிலைக்காணும். ஸ்ப்ரெட் பாசிடிவிட்டியாம்" என பதிவிட்டுள்ளார். அதாவது பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்துக்கு 120 சர்வதேச விருதுகள் கிடைத்ததாக பார்த்திபன் கூறியிருந்தார்.
அதன் விவரங்கள் பற்றி பளூ சட்டை மாறன் பலமுறை கேள்வி எழுப்பியும், பார்த்திபன் பதில் கூறவே இல்லை. அதனை சுட்டிக் காட்டியே தற்போதும் பார்த்திபனை பங்கம் செய்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.


Click it and Unblock the Notifications











