AR Rahman: “Refund போதுமா... ரசிகர்களின் வலி புரியலயா..?” AR ரஹ்மானை விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி, செப்டம்பர் 10ம் தேதி சென்னையில் நடைபெற்றது.
ஈசிஆர் சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சரியான ஏற்பாடுகள் செய்யாதது ரசிகர்களிடம் மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதுகுறித்த சர்ச்சைகள் இன்னும் ஓயாத நிலையில், மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் வீடியோவை ஏஆர் ரஹ்மான் ஷேர் செய்திருந்தார்.
அதனைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன், 'ரசிகர்களின் வலி புரியலையா" என ஏஆர் ரஹ்மானை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரசிகர்களின் வலி புரியலயா?: இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி, இந்த மாதம் 10ம் சென்னையில் நடைபெற்றது. ஆக. 12ம் தேதி நடைபெறவிருந்த இந்நிகழ்ச்சி, கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது வாங்கிய அதே டிக்கெட்டுகள் செல்லும் எனக் கூறியதால், இந்த மாதம் 10ம் தேதி நடந்த நிகழ்ச்சியைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் திரண்டனர். ACTC என்ற நிறுவனம் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது.
ஆனால், மறக்குமா நிகழ்ச்சி மிகப் பெரிய சோகத்தில் முடிந்தது. சென்னை ஈசிஆர் சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சரியான முறையில் செய்யவில்லை என சொல்லப்படுகிறது. 25000 பேர் கலந்துகொள்வார்கள் என அனுமதி வாங்கிவிட்டு, 40000 பேருக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளது ACTC நிறுவனம். இதனால், நிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்தில் ரசிகர்கள் அதிகளவில் திரண்டுள்ளனர்.
இதன் காரணமாக ஈசிஆர் சாலை முழுவதும் வாகன நெரிசல் ஏற்பட்டது. மேலும், முறையான பார்க்கிங் வசதியும் இல்லை என்பதால், ரசிகர்களும் செய்வதறியாது திகைத்தனர். இன்னொரு பக்கம் ரசிகர்களால் நிகழ்ச்சியைப் பார்க்க உள்ளே செல்லவும் முடியவில்லை. அப்படிச் சென்றவர்களும் இருக்கைகள் இல்லாமல் கடுமையாக அவதிப்பட்டனர். சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் வரை அனைவருமே மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டனர்.
ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு, மிக மோசமான அனுபவமே கிடைத்தது. இந்தச் சம்பவம் மிகப் பெரிய சர்ச்சையானதோடு, மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் அவதிப்பட்ட வீடியோக்கள் வெளியாகி வைரலாகின. மேலும், அவர்கள் ஏஆர் ரஹ்மான் மீது அதிருப்தியோடும் கோபத்தோடும் பேசியபடி நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய வீடியோக்களும் ட்ரெண்டாகின. இதனையடுத்து ஏஆர் ரஹ்மானும் ACTC நிறுவனத்தின் தலைவர் ஹேம்நாத்தும் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டனர்.
அதேபோல், டிக்கெட் இருந்தும் நிகழ்ச்சியைப் பார்க்க முடியாதவர்களுக்கு, கட்டணத்தை திருப்பிக் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் என்ற வீடியோவை ஏஆர் ரஹ்மான் தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். இது ரசிகர்கள் உட்பட பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக தனது டிவிட்டர், இன்ஸ்டா பக்கங்களில் கமெண்ட் செக்ஷனை ஏஆர் ரஹ்மான் லாக் செய்துவிட்டு, இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
இதனைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன், ஏஆர் ரஹ்மானை கடுமையாக விமர்சித்துள்ளார். ஏற்கனவே மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி சர்ச்சையான போதே, தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி வந்தார் ப்ளூ சட்டை மாறன். இதனையடுத்து தற்போது அவர், "மறக்குமா நெஞ்சம்? நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட ரசிகர்களின் குரலைக் கேட்க ஏஆர் ரஹ்மான் தயாராக இல்லை" என விமர்சித்துள்ளார்.
மேலும், "ரசிகர்கள் உங்களிடம் இருந்து, ஒரு வீடியோவை தான் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நீங்களோ அமைதியாகவே இருக்குறீர்கள். 'தி இந்து' பத்திரிகைக்கு ஒரு பேட்டி கொடுத்ததோடு, இரண்டு ட்விட்டர் போஸ்ட் மட்டுமே போட்டிருந்தீர்கள். உங்கள் இன்ஸ்டாகிராம் அல்லது ட்விட்டர் பக்கங்களில் வீடியோ ரசிகர்களுக்காக வீடியோ போடுவதை தடுப்பது எது?. அங்கே ஏன் கமெண்ட்ஸ் செக்ஷனை முடக்கி வைத்துள்ளீர்கள்.?"
"டிக்கெட்டுக்கான பணத்தைத் திரும்ப கொடுத்துவிட்டால் அவர்களின் வலியைக் குணப்படுத்திவிட முடியாது என்பதை நீங்கள் நன்றாக புரிந்துகொண்டீர்கள். ஆனால், நீங்கள் ரசிகர்களிடம் உங்கள் முகத்தைக் காட்டாமல் புறக்கணித்து வருவதுடன், கமெண்ட்ஸ் செக்சனையும் முடக்கியுள்ளது மிக மோசமான செயல்" என காட்டமாக விமர்சித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











