»   »  சர்கார் பாடல்களை மீண்டும் கம்போஸ் செய்யும் ஏ. ஆர்.ரஹ்மான்

சர்கார் பாடல்களை மீண்டும் கம்போஸ் செய்யும் ஏ. ஆர்.ரஹ்மான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்கார் திரைப்படத்தின் பாடல்களை மீண்டும் பதிவு செய்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது.

 AR Rahman busy with Sarkar movies telugu version

படத்தின் பாடல்கள் ரிலீசாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகர் விஜய்க்கு தமிழகத்திற்கு அடுத்ததாக கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்த விஷயம்.

அதுபோல், தெலுங்கு சினிமாவிலும் மாஸ் ஹீரோவாக வலம் வர ஆரம்பித்திருக்கிறார் விஜய். அதனால் சர்கார் திரைப்படத்தை தெலுங்கு மொழியிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட உள்ளனர்.

தற்போது சர்கார் திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கான வேலைகளில் ஏஆர்.ரஹ்மான் ஈடுபட்டுள்ளார்.

தமிழில் விவேக் பாடல் எழுதியதுபோல், சர்கார் படத்தின் தெலுங்கு பாடல்களை சந்திரபோஸ் மற்றும் ராக்கி வனமலி எழுதியுள்ளனர். தெலுங்கிலும் நவம்பர் 6ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சர்கார் திரைப்படத்தில், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    AR.Rahman started working for Sarkar movie telugu version songs.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more