ARR New Car: சொந்த காசுல கார் வாங்கி இருக்கேன்.. இசைப்புயலின் நக்கல் பதிவு.. விலை என்ன தெரியுமா?

சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் உலக சினிமாவில் அறியப்படுபவராக உள்ளார். இவரது இசையில் இந்தியா முழுவதும் படங்கள் வெளிவந்து கொண்டே உள்ளது. இவரது இசையில் அடுத்து வெளியாக உள்ள தமிழ் படம் என்றால் அது தக் லைஃப். இந்த படத்தின் புரோமோசனுக்காக வந்த ஏ.ஆர். ரகுமான், தான் புதிதாக வாங்கிய எலெக்ட்ரிக் காரில் வந்திருந்தார். தற்போது அந்த காருடன் நின்று எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இசைத்துறையில் ஜாம்பவானாக உள்ளார். அவரது முதல் படமான ரோஜா படத்தில் இருந்து இவரது இசையில் வெளியாகும் அனைத்து படங்களுமே இசையில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் கடந்த ஒரு ஆண்டாக இன்னும் சொல்லப்போனால் கடந்த ஆறு மாதங்களாக மிகவும் சவாலான காலகட்டத்தில்தான் இருக்கிறார்.

குறிப்பாக அவரது சொந்த வாழ்க்கையில் மனைவி சாராவை பிரிவதாக அவர் அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதுவும் அவரது குழந்தைகள் மூவரும் நன்கு வளர்ந்தவர்களாக மாறிய பின்னர் மனைவியைப் பிரிவதாக அவர் அறிவித்தது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. அவர்கள் பிரிவுக்கு பலரும் பலவிதமாக பல காரணங்களை இட்டுக்கட்டிச் சொல்ல, எனது சொந்த வாழ்க்கை குறித்த வீடியோக்கள், செய்திகள் என அனைத்தையும் நீக்க வேண்டும் இல்லை என்றால் வக்கீல் நோட்டீஸ் வரும் எனக் கூறி அறிவிடும் அளவுக்கு அவரது மனதை சமூக வலைதளங்கள் பாதிப்புக்கு உள்ளாக்கியது.

ar rahman buy Indian EV car Mahindra XEV 9e Nearly RS 31 Lakhs Instagram Photo

தக் லைஃப்: விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் அவரது மனைவி சாராவுக்கு உடல்நிலை சரியில்லாத போது கூட அவருக்கு மாரல் சப்போர்ட் கொடுத்தவர் ஏ.ஆர். ரகுமான். இவர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படமான தக் லைஃப் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

எலக்ட்ரிக் கார்: இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான், தான் புதிதாக வாங்கிய எலக்ட்ரிக் வாகனத்தில் வந்திருந்தார். இந்நிலையில் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் வாங்கியுள்ள மகேந்திரா e9 வகை காருடன் ஸ்டைலாக நின்று எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு அவர் இட்ட கேப்ஷன் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, "எனக்குப் பிடித்த இந்திய EV கார் மஹிந்திரா XEV 9e. இந்த ஸ்டைலான இந்திய காருக்கான ஆடியோவை நாங்கள் வடிவமைத்தோம்" எனவும் இந்த காரை தான் பணம் கொடுத்துதான் வாங்கினேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

ar rahman buy Indian EV car Mahindra XEV 9e Nearly RS 31 Lakhs Instagram Photo

விலை: இவரது இந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்கள் லைக்குகளை தெறிக்க விட்டு வருகிறார்கள்:. அவரது மகள் கதீஜா, கமெண்ட் செக்‌ஷனில் ஃபயர் விட்டுள்ளார். ஏ.ஆர். ரகுமான் வாங்கியுள்ள இந்த எலக்ட்ரிக் கார் சுமார் , ரூபாய் 22 லட்சத்தில் இருந்து ரூபாய் 31 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏ.ஆர். ரகுமான் எலக்ட்ரிக் கார் வாங்கியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தக் லைஃப். இந்த படத்தில் கமல் ஹாசன், சிம்பு, அபிராமி, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் பாடல் இன்று அதாவது ஏப்ரல் 18ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. அதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட படக்குழுவினர் படம் குறித்த பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

தக் லைஃப் படம், கமல்ஹாசனின் 234 வது படம். இந்த படத்தின் முதற்கட்ட அறிவிப்பில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அக்னி நட்சத்திரம் படத்திற்கு பின்னர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்குப் பின்னர் இணைந்துள்ள படம் தான் தக் லைஃப். இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயரித்துள்ளது. இந்த படத்தில் கமல் ஹாசனுடன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இது மட்டும் இல்லாமல் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார் என்றதும் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது ஆர்வம் அதிகரித்தது.

கமல் ஹாசனின் தோற்றத்தில் இருந்து, இந்த படத்திற்காக உடல் எடையை பெருமளவு குறைத்து, புதிய லுக்கிற்கு சென்ற சிம்பு வரை அனைவரது லுக்கும் ரசிகர்களை கவர்ந்தது. படத்தின் முதல் பாடலை ரிலீஸ் செய்யும் நிகழ்ச்சியில் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன் பேச்சு கவனத்தை ஈர்த்தது.

ஐ லவ் யூ: அவர் பேசும்போது, " இந்தியாவின் இணைப்பு மொழியாக உள்ள ஆங்கிலத்தில் பேசுகிறேன். அது தமிழனின் எதார்த்தம் எனக் கூறி பேசத் தொடங்கினார். ஆனால் அவர் ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் பேசினார். இந்த படத்தில் இரண்டு நடிகைகள் உள்ளார்கள். ஆனால் அவர்கள் ஒருநாளும் எனக்கு ஐ லவ் யூ எனக் கூறியது இல்லை. ஜோஜு ஜார்ஜ் என்னை படப்பிடிப்புத் தளத்தில் எப்போது எங்கு பார்த்தாலும், அது காலையில் பார்த்தாலும் சரி, இரவில் பார்த்தாலும் சரி, குட் மார்னிங் கூட சொல்ல மாட்டார். எப்போது பார்த்தாலும் கமல் சார் ஐ லவ் யூ சார் என்றுதான் கூறுவார்.

அசோக் செல்வன்: நடிகைகள் இருவரும் ( த்ரிஷா மற்றும் அபிராமி) எனக்கு லவ் யூ சொல்ல வில்லை என்றால் என்ன. போனா போகுது, நமக்கு நம்ம ஆள் இருக்கிறார்( ஜோஜு ஜார்ஜ்) என நான் மனதைத் தேற்றிக் கொள்வேன். அசோக் செல்வன் பேசும் போது ஆச்சரியமாக இருக்கிறது என்று பேசினார். அவர் பேசும்போது நான் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்த எனது ஆரம்ப காலம் நினைவுக்கு வந்துவிட்டது. பெரிய பெரிய ஜாம்பவான்களுக்கு மத்தியில் நடிக்க வேண்டும். பாலசந்தர் மாதிரி ஒரு இயக்குநரிடத்தில் வேலை பார்ப்பது என்றால் பயமாக இருக்கும். ஒரு டயலாக் சொல்வதற்கு முன்னர் எச்சில் விழுங்க வேண்டுமா? டயலாக் சொல்லி முடித்த பின்னர் எச்சில் விழுங்க வேண்டுமா என்பதில் இருந்து எனக்கான சந்தேகம் தொடங்கும். ஒரு நடிகர் மற்ற நடிகர்களை பார்த்து மலைத்துப் போகக் கூடாது. அந்த காலம் வேறு இந்த காலம் வேறு என்ற புரிதல் இருந்தாலே போதுமானது" என பேசினார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X