A.R. Rahman: ஃப்ரேம் பாருங்க ஜி.. விவாகரத்துக்குப் பின்.. ஒரே இடத்தில் ஏ.ஆர். ரகுமான் வாரிசுகள்!
சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், இந்திய இசைத்துறையில் ஒரு புரட்சிகரமான இசையமைப்பாளர். அவரது இசைப் பயணம் உலகளவில் புகழ் பெற்றது. இதனால் இந்தியாவும் தமிழ்நாடும் பெருமை பெற்றுக் கொண்டே உள்ளது. ஏற்கனவே ஆஸ்கார் வென்ற இசைப்புயல் கடந்த ஆண்டு கிராமி விருதை வென்று மீண்டும் தனது திறமையை நிரூபித்தார். ஏ.ஆர். ரகுமானுக்கு இரண்டு மகள்கள், கதீஜா ரகுமான் மற்றும் ரஹீமா ரகுமான், மற்றும் ஒரு மகன், ஏ.ஆர். அமீன் உள்ளார்கள். இவர்கள் மூவரும் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்கள்.
கதீஜா ரகுமான், ஏ.ஆர். ரகுமானின் மூத்த மகள், ஒரு திறமையான இசைக் கலைஞர் மற்றும் இசையமைப்பாளர். 2025-ல், கதீஜா தனது அப்பா ஏ.ஆர். ரகுமானுடன் இணைந்து பணியாற்றிய "FIRDAUS" இசைக்குழுவின் மூலம் பல இசை தொகுப்புகளை வெளியிட்டார். மேலும், இவர் ஒரு பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.
ஹீமா ரகுமான், ஏ.ஆர். ரகுமானின் இளைய மகள், இசை மற்றும் கலைத் துறையில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் தனது தந்தையின் இசை நிகழ்ச்சிகளிலும், கலை சம்பந்தமான நிகழ்வுகளிலும் அவ்வப்போது பங்கேற்று வருகிறார். 2025-ல், ஏ.ஆர். ரகுமான் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, ரஹீமா தனது தந்தையின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அவர் நலமாக இருப்பதாக உறுதிப்படுத்தி, ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் நிம்மதியைக் கொடுத்தார். ஆர். அமீன், ஏ.ஆர். ரகுமானின் மகன், ஒரு பின்னணிப் பாடகராகவும், இசைக் கலைஞராகவும் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். இவர் தனது தந்தையின் இசைத் தயாரிப்புகளில் பங்கேற்று, பல பாடல்களில் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

விவாகரத்து: ஏ.ஆர். ரகுமான் 1995-ல் சைரா பானுவை மணந்தார். 2024-ல், இவர்கள் 29 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து பிரிந்தனர். இந்த பிரிவு ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. மேலும் இவர்களது விவாகரத்து பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இவர்களின் விவாகரத்திற்குப் பின்னர் ஏ.ஆர். ரகுமான் குறித்து பல்வேறு அவதூறு செய்திகள் இணையத்தில் உலா வரத் தொடங்கியது. அதன் பின்னர், ஏ.ஆர். ரகுமான் தரப்பில் இருந்து வக்கீல் நோட்டீஸ் விட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்த பின்னர்தான், அவதூறு தகவல்கள் நீக்கப்பட்டது.
ஏ.ஆர். ரகுமானின் குழந்தைகள்: தங்கள் அப்பாவைப் போலவே இசை துறையில் சாதிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கதீஜா, ரஹீமா மற்றும் அமீன். இவர்கள் மூவரும் தங்கள் அப்பாவைப் போலவே, இசை மற்றும் கலைத் துறையில் தங்கள் அடையாளத்தை உருவாக்கி, ரசிகர்களின் அன்பையும் ஆதரவையும் பெற தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை கதீஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலில், " ஃப்ரேம் பாருங்க ஜி" என கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











