இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி!

சென்னை: இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் இந்திய சினிமா மட்டுமன்றி உலக சினிமாவில் ஒரு முக்கியமான இசையமைப்பாளர்.

அப்போதும், இப்போதும், எப்போதும் என ரசிகர்களின் எவர் க்ரீன் இசையமைப்பாளராக இருந்து வருகிறார் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான்.

இந்த ஆண்டில் இசைபுயலின் இசையில் வெவ்வேறு கதைகளங்களை கொண்ட 4 தமிழ் படங்கள் காத்திருப்பில் உள்ளது ரசிகர்களிடைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சயின்ஸ் ஃபிக்சன்

சயின்ஸ் ஃபிக்சன்

ரவிக்குமார் இயக்கத்தில் சிவ கார்த்திகேயன் நடிப்பில் சயின்ஸ் ஃபிக்சன் கதைகளத்தை கொண்டு வெளியாகவுள்ள படம் அயலான். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் தற்போது நடந்து வருகிறது.

க்ரைம் திரில்லர்

க்ரைம் திரில்லர்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள படம் கோப்ரா. இந்த படத்திற்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார். க்ரைம் திரில்லர் கதைகளத்தை கொண்ட இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் குறிப்பாக ரஹ்மான் தன்னுடைய இசையில் மிரட்டியிருந்தார்.

3ம் முறை கூட்டணி

3ம் முறை கூட்டணி

சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் கேங்ஸ்டர் கதைகளத்தில் வெளிவரவுள்ள படம் பத்து தல. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பின்னர் 3ம் முறையாக சிம்பு படத்திற்கு ரஹ்மான் இசையமைப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரலாற்று கதை

வரலாற்று கதை

மணிரத்னம் இயக்கத்தில் மிக பெரிய பொருட்செலவில் வரலாற்று கதையாக உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தை திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. எவர் க்ரீன் காம்போ மணி ரத்னம் - ரஹ்மான் இந்த படத்தில் இணைந்துள்ளது கதைக்கு கூடுதல் பலமாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X