பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே வாழ்க்கை படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை

By Mayura Akilan

பிரேசிலின் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் சுயசரிதை திரைப்படமாகத் தயாராகின்றது. இந்தப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

ஹாலிவுட் பிரபலங்களான ஜெப் சிம்பாலிஸ்ட் மற்றும் மைக்கேல் சிம்பாலிஸ்ட் பீலே படத்தை எழுதி இயக்கியுள்ளார்கள்.

கெவின் டி பவுலா, வின்சென்ட் டி ஓனோபிரியோ, ரோட்ரிகோ சன்டோரோ, டியாகோ போனேடா, கோல்ம் மியானே ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

AR Rahman to compose for Pele's biography

ஏ.ஆர்.ரகுமான் இசை

பீலே படத்திற்கு இசையமைக்கும் பணி இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்றுள்ள ஏ.ஆர். ரகுமானுக்குக் கிடைத்துள்ளது. இதை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ரிலீஸ்

பிரேசிலில் பிபா உலகக் கோப்பை நடைபெற்றபோதே இந்தப் படத்தை வெளியிடுவதற்கு முயற்சி செய்யப்பட்டது. ஆனால் தயாரிப்புக்கு பிந்தைய பணிகள் நிறைவடையாததால் அப்போது வெளியிடப்பட முடியாத இந்தப் படம் அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் திரைக்கு வரும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ரகுமான் மகிழ்ச்சி

இதுகுறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ள ரகுமான், பிரேசில் நாட்டின் திறமையான பாடலாசிரியரும், பாடகருமான ஆன பியட்ரிசுடன் இணைந்து பணியாற்றுவது உற்சாகமாக உள்ளது என்று அவர் தனது தகவலில் குறிப்பிட்டுள்ளார்.

ஹாலிவுட் படங்களுக்கு இசை

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழும் ரகுமான், இந்த ஆண்டு 'ஹண்ட்ரட் புட் ஜர்னி', 'மில்லியன் டாலர் ஆர்ம்' என்ற இரண்டு ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X