twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மலேஷியாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி..10,000 அடி..உயிரை பணயம் வைத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்

    |

    கோலாலம்பூர்: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு உலகெங்கும் எப்போதும் ரசிகர்களிடையே வரவேற்பு உண்டு.

    ஏ.ஆர்.ரஹ்மான் சமீப காலமாக ஏராளமான படங்களுக்கு இசையமைக்கிறார். பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துக்கொள்கிறார்.

    ஏ.ஆர்.ரஹ்மான் 7 ஆண்டுகள் கழித்து மலேஷியாவில் இசை நிகழ்ச்சி நடத்துவதால் அதை உயிரைப் பணையம் வைத்து வித்தியாசமாக விளம்பரப்படுத்தியுள்ளார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்.

    “மனம் பொறுக்கவில்லை; மலேசியா வந்துவிட்டேன்”: துன் சாமிவேலுவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய வைரமுத்து“மனம் பொறுக்கவில்லை; மலேசியா வந்துவிட்டேன்”: துன் சாமிவேலுவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய வைரமுத்து

    ஏ.ஆர்.ரஹ்மான் எனும் இசைப்புயல்

    ஏ.ஆர்.ரஹ்மான் எனும் இசைப்புயல்

    ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்றாலே அதற்கு தனி மவுசு உண்டு. 1992 ஆம் ஆண்டு ஆரம்பித்த ரஹ்மானிசம் இன்றும் ரசிகர்களின் பேராதரவுடன் தொடர்ந்துக்கொண்டுத்தான் இருக்கிறது. அதற்கு காரணம் அவர் மொழி, நாடு கடந்து இசையமைப்பதே. இன்றும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலக அளவில் ரசிகர் கூட்டம் அதிகம் உண்டு. தமிழர்கள் வாழும் நாடுகளில் மலேஷியா, சிங்கப்பூர், துபாய், அரபு நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் ரசிகர்கள் அதிகம் உண்டு.

    வெறித்தனமான மலேஷிய ரசிகர்கள்

    வெறித்தனமான மலேஷிய ரசிகர்கள்

    வெறித்தனமான ரசிகர்களை கொண்ட மலேஷியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சமீப ஆண்டுகளாக ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடக்கவே இல்லை. தமிழக திரைத்துறையினரை எப்போதும் தூக்கி வைத்து கொண்டாடும் நாடு மலேஷியா. நமது நடிகர் சங்க கடனுக்காக நடிகர் நடிகைகள் கலந்துக்கொண்ட கலைவிழா கூட மலேஷியாவில்தான் நடந்தது. இங்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரமாண்டமாக மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் வருகின்ற 2023 ஜனவரி மாதம் 28 ஆம் தேதி நடக்கிறது.

    புதிய வடிவில் விளம்பர உயிரை பணயம் வைக்கும் ஏற்பாடு

    புதிய வடிவில் விளம்பர உயிரை பணயம் வைக்கும் ஏற்பாடு

    இந்த நிகழ்ச்சி குறித்து மக்கள் மத்தியில் வித்தியாசமாக கொண்டுச் சேர்க்க நிகழ்ச்சி நடத்தும் முகமது யூசுப் முடிவு செய்தார். நிகழ்ச்சியும் நடத்தணும், அதை விளம்பரமும் படுத்தணும், அது சாதனை புத்தகத்திலும் இடம் பெற வேண்டும் என்பதற்காக 10000 அடி உயரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பாரசூட்டில் இருந்து குதித்து இந்த அறிவிப்பை வெளியிட முடிவு செய்தார். இதையடுத்து அவரும் அவரது குழுவினரும் ஹெலிகாப்டரில் பறந்து 10 ஆயிரம் அடி உயரத்திலிருந்து விளம்பரம், மலேஷிய கொடி உள்ளிட்டவைகளுடன் குதிப்பதற்காக பயிற்சி எடுத்தனர்.

    10 ஆயிரம் அடி உயரத்திலிருந்து உயிரை பணயம் வைத்து குதித்தனர்

    10 ஆயிரம் அடி உயரத்திலிருந்து உயிரை பணயம் வைத்து குதித்தனர்

    குறிப்பிட்ட நாளில் ஹெலிகாப்டர் மூலம் முகமது யூசுப் குழுவினர் வானில் பறந்தனர். பாரசூட் அதற்கான பிரத்யோக உடை, கண்ணாடியுடன் தயாராக இருந்த அவர்கள் 10 ஆயிரம் அடி உயரத்தில் ஹெலிகாப்டர் பறந்தபோது வானிலிருந்து குதித்தனர். மொத்தம் 4 பேர் பாரசூட் மூலம் கைகளில் மிகப்பெரிய பதாகைகளுடன் குதித்தனர். வானில் வட்டமடித்தப்படி கைகளை கோர்த்து பதாகைகளுடன் பறந்தனர். ஒரு பதாகையில் மலேஷிய கொடியும், இன்னொன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் கைகளை விரித்தப்படி நிகழ்ச்சி விளம்பர பேனரும், இன்னும் இரண்டு பதாகைகளில் வாசகங்களும் இருந்தன.

    மலேஷியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை

    மலேஷியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை

    உயிரைப்பணயம் வைத்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையை பிரபலப்படுத்தும் நோக்குடன் பாராசூட்டிலிருந்து குதித்த அவர்கள் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த பெரிய மைதானத்தில் தரையிறங்கினர். இதை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர். இந்த முறையில் விளம்பரம் வெளியிடுவது மலேஷியாவில் இதுவே முதல் முறை ஆகும். இந்த சாதனை 'மலேஷியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 'அதிக உயரத்தில் இருந்து குதிக்கப்பட்ட சாதனையாக வெளியிடப்பட்டுள்ளது.

    English summary
    A.R.Rahman's musical performances are always well-received by fans all over the world. A.R.Rahman has been composing music for many films in recent times. He attends a lot of public functions. A.R.Rahman is performing a concert in Malaysia after 7 years, so the organizer has risked his life and promoted it differently.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X