கொஞ்சம் விட்டுருந்தா என் குழந்தை செத்திருப்பான்!.. ஏ.ஆர். ரஹ்மான் தான் பதில் சொல்லணும்.. குமுறும் தாய்!
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது என்றதுமே ரசிகர்கள் எவ்வளவு விலை என்றாலும் பரவாயில்லை என டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு அவரது இசை மழையில் நனைய காத்திருந்த நிலையில், மழை வந்து முன்னதாக அந்த நிகழ்ச்சியை ரத்து செய்யும் நிலைக்கு கொண்டு வந்தது.
இந்நிலையில், நேற்று பனையூரில் பிரம்மாண்டமாக இசை கச்சேரி நிகழ்ச்சியை ஏ.ஆர். ரஹ்மான் நடத்தியிருந்தார். ஆனால், அதை பார்க்க வந்த ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி செத்திருப்போம் என அலறியடித்துக் கொண்டு சென்ற காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

ஏ.ஆர். ரஹ்மான் சரியான நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை நிர்ணயிக்கவில்லை என்றும் அதிகளவில் டிக்கெட்டுகளை விற்றது தான் இப்படியான கூட்ட நெரிசலுக்கு காரணம் எனவும் சமூக வலைதளங்களில் பலரும் குமுறி வருகின்றனர்.
30 ஆயிரம் ரூபாய் டிக்கெட் வாங்கியே இந்த கதி: ஏ.ஆர். ரஹ்மான் இசை கச்சேரி சென்னையில் நடக்கிறது என்றதும் நல்லா கிட்டே போய் பார்க்கணும் என 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கினேன். ஆனால், எங்களுக்கே உள்ளே போக முடியவில்லை என்றும் சீட் கிடைக்கவில்லை என்றும் பல எலைட் பெண்களே புலம்பி வருகின்றனர். அந்த அளவுக்கு நிகழ்ச்சி விஐபி சீட்களுக்கு கூட ஒரு சரியான ஏற்பாட்டை செய்யவில்லை என்கின்றனர்.

என் மகன் உயிரே போயிருக்கும்: எந்த பாதுகாப்பும் இல்லை, பவுன்சர்களும் இல்லை, டிக்கெட்டுகளை வைத்திருப்பவர்கள் ஒரு கிலோ மீட்டருக்கு க்யூவில் நிற்கிறோம். கூட்ட நெரிசலில் எங்களை தள்ளி விட்டுட்டாங்க, கொஞ்சம் விட்டு இருந்தா என் பையனை மிதிச்சே கொன்னுருப்பாங்க என ஒரு அம்மா வெடித்துச் சிதறி அளித்த பேட்டியெல்லாம் ரசிகர்களை உலுக்கி எடுத்துள்ளது.
பெண்களுக்கு பாலியல் தொல்லை: அதுமட்டுமின்றி கூட்ட நெரிசலில் பெண்களுக்கு பாலியல் தொல்லையையும் சில விஷமிகள் கொடுக்க, பல பெண்கள் அலறி அழுது கொண்டே சென்றதாகவும் ஏகப்பட்ட புகார்கள் குவிந்து கொண்டே இருக்கிறது. உரிய போலீஸார் மற்றும் பவுன்சர்களை போடவில்லை என்றும் பேராசை காரணமாக அந்த அரங்கின் இருக்கைகளை விட அதிக டிக்கெட்டுகளை விற்றதே இதற்கு காரணம் என குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஏ.ஆர். ரஹ்மான் தான் இதற்கு பதில் சொல்லியாகணும் என்றும் இந்த மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியை என்றைக்குமே மறக்க மாட்டோம் என ரசிகர்கள் வீடியோக்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் ஏ.ஆர். ரஹ்மானையும் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் கிழித்துத் தொங்க விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











