ஏஆர் ரஹ்மானை பார்க்க போனா ஜவான் ஷாருக்கான் கணக்கா மூஞ்சியை பேத்து விட்டுடானுங்க.. பறக்கும் மீம்ஸ்!

சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் நேற்று நடத்திய மறக்குமா நெஞ்சம் இசை கச்சேரி நிகழ்ச்சியை ரசிகர்கள் எத்தனை காலம் ஆனாலும் மறக்கமாட்டார்கள் என்றே தெரிகிறது.

25 ஆயிரம் கொடுத்து 5 டிக்கெட் வாங்கினேன் ப்ரோ, சோழிங்கநல்லூரிலேயே டிராபிக் என போலீஸ் திருப்பி விட்டாங்க என ரசிகர்கள் புலம்புவதும் 5 மணியில் இருந்து காரில் குழந்தையுடன் டிராபிக்கில் கஷ்டப்படுகிறோம் என எலைட் மக்கள் ஏ.ஆர். ரஹ்மானை சந்திக்க முடியாத வருத்தத்தை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

AR Rahman concert memes trending in social media

மேலும், ஏ.ஆர். ரஹ்மான் இசை கச்சேரிக்கு போனதற்கு சன் டே அதுவுமா சரக்கு போட்டுட்டு வீட்ல ரஹ்மான் ஹிட்ஸ் போட்டு தூங்கியிருக்கலாம் என ஏகப்பட்ட மீம்களும் பறக்கின்றன.

AR Rahman concert memes trending in social media

பேராசையால் வந்த விளைவு: சென்னையில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு கோடிக் கணக்கில் ரசிகர்கள் உள்ள நிலையில், பல கோடிகளை ஒரே நிகழ்ச்சி மூலம் சம்பாதித்து விடலாம் என்பதற்காக சரியான ஏற்பாடுகள் ஏதுமின்றி கிழக்கு கடற்கரை சாலையையே ஞாயிற்றுக்கிழமை அதுவுமாக கலவர பூமியாக மாற்றி விட்டனர். சன் டே சாலைகள் பொதுவாக காலியாக இருக்கும் என நினைத்து சென்ற ஆயிரக் கணக்கான ரசிகர்களுக்கு பல மணி நேர டிராபிக் நெரிசல் கழுத்தை நெரித்துள்ளது.

AR Rahman concert memes trending in social media

மேலும், சரியான எண்ணிக்கையில் டிக்கெட்டுகளை விற்பனை செய்யவில்லை என்றும் டிக்கெட்டுகளை வாங்காத பல ஆயிரம் ரசிகர்கள் திடீரென எல்லா இடங்களுக்கும் புகுந்து அராஜகம் செய்ததை போலீஸார் மற்றும் பவுன்சர்கள் யாருமே தடுக்கவில்லை என்றும் அதன் விளைவு தான் இப்படியொரு மோசமான அனுபவத்தை ரசிகர்கள் எதிர்நோக்க காரணமே என்கின்றனர்.

AR Rahman concert memes trending in social media

ஜவான் மாதிரி மூஞ்சியை பேத்துட்டாங்க: ஏ.ஆர். ரஹ்மானின் இசை கச்சேரியை காண சென்ற எங்களை ஜவான் ஷாருக்கான் மாதிரி மூஞ்சியை பேத்து கட்டுப் போட வச்சிட்டாங்க என அந்நியன் படத்தின் பிரபல மீம் டெம்பிளேட்டை வைத்து பதிவிட்டுள்ள மீம் வேறலெவலில் டிரெண்டாகி வருகிறது.

ஏ.ஆர். ரஹ்மானை மன்னிக்கவே மாட்டோம் என ரசிகர்கள் டிக்கெட்டுகளை கிழித்து போடும் காட்சிகளையும் பதிவிட்டு வரும் நிலையில், வெளியே என்ன நடக்குதுன்னே தெரியாமல் உள்ள ஒருத்தர் பர்ஃபார்ம் பண்ணிட்டு இருக்காரு என ஏ.ஆர். ரஹ்மானை தொங்க விட்டு மீம்களால் துவைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X