தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் இமான்.. ஏஆர் ரஹ்மான் என்ன சொல்லியிருக்கார் பாத்தீங்களா!
சென்னை: தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் டி இமானுக்கு ஏஆர் ரஹ்மான் வாழ்த்து கூறியுள்ளார்.
தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் சினிமா 7 விருதுகளை திரும்பி பார்க்க செய்துள்ளது.
சிறந்த நடிகர், துணை நடிகர், குழந்தை நட்சத்திரம், இசையமைப்பாளர் என விருதுகளை குவித்துள்ள தமிழ் திரை நட்சத்திரங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

பலரும் வாழ்த்து
அந்த வகையில் சிறந்த இசையமைப்பளாருக்கான விருதுக்கு தேர்வாகியுள்ள டி இமானுக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்கர் நாயகனான இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் டி இமானை வாழ்த்தி டிவிட்டியிருக்கிறார்.

கண்ணான கண்ணே
அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் பெரும் ஹிட்டானது. அப்பா மகள் அன்பை இசையால் அடுத்த லெவலுக்கு கொண்டு சென்று உருக வைத்திருப்பார் இமான்.

இமானுக்கு தேசிய விருது
இந்தப் பாடல் ஏற்கனவே பல்வேறு விருதுகளை குவித்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த பாடலுக்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருது இமானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
என் பெற்றோர் ஆசீர்வாதம்
இதனை முன்னிட்டு இமான் தனது டிவிட்டர் பக்கத்தில் கடவுளின் மகிமை, என் பெற்றோர் ஆசீர்வாதம் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து அன்பான மியூசிக் காதலர்களிடமிருந்து தொடர்ச்சியான ஆதரவு!
சிறந்த இசை இயக்குனருக்கு தேசிய விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளேன். தமிழ் இசைக்கு தேசிய அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றதன் தூய மகிழ்ச்சி! கடவுளுக்கு புகழ் என பதிவிட்டிருந்தார்.
மிகவும் தகுதியானவர்
இதனை பார்த்த இசைப்புயல் ஏஆர் ரஹ்மான், வாழ்த்துகள்.. மிகவும் தகுதியானவர் என பதிவிட்டு பாராட்டியுள்ளார். ஏஆர் ரஹ்மான் தனது முதல் படமான ரோஜா படத்திற்கு தேசிய விருது பெற்றார். தெடர்ந்து மின்சார கனவு, கன்னத்தில் முத்தமிட்டாள், லகான், மாம், காற்று வெளியிடை என பல படங்களுக்கு விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











