பேட்ட படத்துக்கு மியூசிக் அனிருத் தான்.. ஆனா ரஹ்மானும் இருக்காருங்க..!
பேட்ட படத்தில் ஏஆர்.ரஹ்மான் பங்களிப்பு உள்ளது
சென்னை: ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தில் ஏஆர்,ரஹ்மானின் பங்கு உள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படத்திற்கு பேட்ட என பெயரிட்டுள்ளனர். பெயரை வைத்து ரசிகர்கள் எந்த மாதிரியான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என விவாதிக்க தொடங்கி விட்டனர்.

ரஞ்சித் இயக்கிய படங்களில் இதுவரை பேசாமல் விட்ட, அல்லது பேசப்படாத அரசியலை ரஜினி பேசும் வண்ணம் கதையமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பேட்ட என்ற பெயர் மறந்துபோன சில விஷயங்களை மீட்டெடுத்து அசைபோட வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது தெரிந்த விஷயம். முதன்முறையாக ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைக்கிறார் என்பதால், ரொம்ப ஸ்பெஷலாக இருக்க வேண்டுமென கடுமையாக உழைக்கிறராம். பேட்ட திரைப்படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசையமைக்கவில்லை என்றாலும், ரஹ்மானின் பங்கு இப்படத்தில் உள்ளது.
சென்னை செங்குன்றத்தில் ஒய்.எம் ஸ்டுடியோ என்று புதிதாக ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அது இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மானுக்கு சொந்தமானதாகும். அந்த ஸ்டுடியோ ஆரம்பித்து முதன்முதலில் 2.0 படக்காட்சிகள் படமாக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இப்போது பேட்ட திரைப்படத்தின் சில காட்சிகளும் அங்கே படமாக்கப்பட்டுள்ளது.
ஆனால், இசை நோட்டுகள் பறக்க ரஜினி நடந்துவருவதுபோன்ற மோஷன் போஸ்டர் அங்கேதான் படமாக்கப் பட்டதா எனத் தெரியவில்லை. பேட்ட திரைப்படத்தில், விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், நவாசுதின் சித்திக், பாபி சிம்ஹா மற்றும் பலர் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











