AR Rahman: பட்டம் பெற்ற ஏ.ஆர். ரஹ்மான் மகள்.. அப்பாவாக பெருமையாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட்!
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு மொத்தம் மூன்று குழந்தைகள். இதில் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என ரஹ்மானின் குடும்பம் பெரிய குடும்பம் தான். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் தனது இளைய மகள் ரஹீமா ரஹ்மான் பட்டம் பெற்றது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இசைப்புயல் கடந்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டு தனது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார் இது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. 29 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இருந்த அவர் ஏன் திடீரென வெளியேற வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பினார்கள். தனது மனைவியை அவர் பிரிவதாக அறிவித்த பின்னர் இணையத்தில் ரஹ்மானை பலரும் மோசமாக விமர்சித்தனர். ஆனால் அந்த காலகட்டத்தில் ரஹ்மானுக்கு மிகவும் பக்க பலமாக இருந்தவர்கள் என்றால் அது அவரது குழந்தைகள் தான்.

குழந்தைகள்: குறிப்பாக அவரது மூத்த மகள் கதீஜாவும் இளைய மகள் ரஹீமாவும் அவர்களது சமூக வலைதளப் பக்கங்களில் தந்தைக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள். இது மட்டும் இல்லாமல் ஏ.ஆர். ரஹ்மான் ஆடு ஜூவிதம் படத்திற்காக கிராமி விருது வாங்கிய போது கூட அவரை அதிகம் கொண்டாடியது அவரின் மகள்களும் மகனும் தான்.
இளைய மகள்: இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இளைய மகள் ரஹீமா ரஹ்மான் பட்டம் பெற்றது தொடர்பான புகைப்படத்தைப் பகிர்ந்து, வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அந்த பதிவில் ஒரு தந்தையாக தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பெருமை: தனது மகள் பட்டம் பெற்ற புகைப்படத்தை பகிர்ந்த ரஹ்மான், அதற்கு, " தனது இளைய மகள் ரஹீமா Hospitality, Entrepreneurship, and Innovation துறையில் பட்டம் பெற்றுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார். தந்தையாக எனக்கு பெருமையாக இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவில் தனது இரண்டு மகள்கள் மற்றும் மகனை டேக் செதுள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் மகள் படித்த கிளென் கல்வி நிறுவனமானது, சுவிட்சர்லாந்தில் இருக்க கூடிய மிகவும் புகழ் பெற்ற கல்வி நிறுவனம் ஆகும். ஏ.ஆர். ரஹ்மான் மகள் பட்டம் பெற்றதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஏ. ஆர். ரஹ்மான் தற்போது இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் கில்லர் படத்தில் இசையமைக்க கமிட் ஆகியுள்ளார்.


Click it and Unblock the Notifications











