AR Rahman Daughter: எங்கப்பா என்ன Scam பண்றவரா.. கொதித்தெழுந்த ஏ.ஆர். ரஹ்மான் மகள்.. நீண்ட விளக்கம்!
சென்னை: சுமார் 46 ஆயிரம் ரசிகர்களை ஒன்று திரட்டி பனையூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கு ஏ.ஆர். ரஹ்மான் ஏற்பாடு செய்திருந்த நிலையில் டிக்கெட்டு வாங்கியவர்களுக்கே சீட் இல்லாமல் போனதும், எங்க கிட்ட டிக்கெட் இருக்கு, நீங்க வெளியே போங்க என ஏற்கனவே ஒரு கூட்டம் உள்ளே உட்கார்ந்து கொண்டு பிரச்சனை செய்ததும் உட்கார இடமின்றி நின்று கொண்டே கூட்ட நெரிசலில் சிக்கியதாகவும் ரசிகர்கள் பெரும் புகார்களை எழுப்பி இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மிகப்பெரிய ஸ்கேம் செய்துவிட்டார் என்றும் மோசடி மன்னன் என்றும் விளாசித் தள்ளினர்.
சமூக வலைதளங்கள் முதல் நேஷ்னல் மீடியாக்கள் வரை இந்த செய்தி நேற்று பற்றி எரிந்த நிலையில், இதையெல்லாம் பார்த்து கடுப்பான ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா எங்கப்பா என்ன மோசடி மன்னனா? என்றும் அவர் தமிழ்நாட்டுக்கும் மக்களுக்கும் எவ்ளோ நல்லது செய்திருக்கிறார் என ஒரு பெரிய லிஸ்ட்டே எடுத்து வெளியிட்டு தனது கோபத்தை கொட்டித் தீர்த்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தில் நானே பலி கடா ஆகிறேன் என ஏ.ஆர். ரஹ்மான் கூறிய நிலையில், சினிமா பிரபலங்கள் ஒவ்வொருவராக தற்போது ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
டபுள் மடங்கு கூட்டம்: மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு 46 ஆயிரம் இருக்கைகள் கொண்ட பிரம்மாண்ட திறந்த வெளி அரங்கில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில், டிக்கெட்டுகள் வாங்கியவர்கள் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே பார்க்கிங்குகள் நிரம்பி வழிந்து விட்டன.
சுமார் ஒரு லட்சம் ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டது தான் இப்படியொரு பிரச்சனை வெடிக்கவே காரணம் என்றும் அதிக கூட்ட நெரிசலை அந்த இடத்தில் சமாளிக்க முடியாமல் போலீஸாரும் திணறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தீவிர விசாரணை: ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் உண்மையாகவே அதிக டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதா? எங்கிருந்து இவ்வளவு அதிகமான கூட்டம் வந்தது, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ACTC ஈவென்ட் நிகழ்ச்சி முறைகேடு நடத்தியதா என அனைத்தையும் விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலினின் வாகனமே டிராபிக் நெரிசலில் சிக்கிய நிலையில், இந்த விவகாரம் பூதாகரமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்கப்பா ஸ்கேமர் இல்லை: இந்நிலையில், இந்த விவகாரத்தால் டென்ஷனான ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதீஜா என்னவோ எங்கப்பா மிகப்பெரிய ஊழல்வாதி என்பது போல செய்திகள் போடுறீங்களே, சோஷியல் மீடியாவில் திட்டி தீர்க்குறீங்களே, எங்கப்பா தமிழ்நாட்டுக்கும் ரசிகர்களுக்கும் எவ்வளவோ உதவிகளை இத்தனை வருஷமா செஞ்சுட்டு வருகிறார்.
கடந்த 2015ல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் 2016ம் ஆண்டு நெஞ்சே எழு நிகழ்ச்சியை சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடத்தினார். கேரள மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது 2018ம் ஆண்டு வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் உதவியவர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு உதவியவர், திரைத்துறையில் ஏழ்மை நிலையில் உள்ள லைட் மேன்களுக்கு உதவும் நோக்கில் இலவசமாக இசை நிகழ்ச்சி நடத்தியவர் என பெரும் பட்டியலையே வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











