A.R.Rahman - அந்தப் படத்துக்கு இசை அமைக்கவில்லை.. அது வதந்தி.. ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்
சென்னை: A.R.Rahman (ஏ.ஆர்.ரஹ்மான்) ஏ.ஆர்.ரஹ்மான் துருவ் விக்ரம் படத்துக்கு இசையமைப்பதாக வெளியான தகவலை அவர் மறுத்திருக்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ரோஜா படத்தின் மூலம் அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். முதல் படத்திலேயே தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்து தேசிய விருதை வென்று அசத்தியவர். அதன் பிறகு அவர் கோலிவுட்டை ஆட்சி செய்ய ஆரம்பித்தார். அவரது இசையில் வந்த புதிய சத்தங்களும், அவர் போட்ட பல ட்யூன்களும் ரசிகர்களை அவர் வசமாக்கியது. எனவே 90களில் ரஹ்மானின் கொடி உயரவே பறந்தது. பல இயக்குநர்கள் அவரை புக் செய்தனர். தொடர்ந்து பாலிவுட்டுக்கும் சென்றார் அவர்.

ஆஸ்கர் நாயகன்: பாலிவுட்டில் இசையமைத்துக்கொண்டிருந்த ஏ.ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். இந்தியாவில் எப்படி அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றாரோ அதேபோல் ஹாலிவுட்டிலும் தான் அறிமுகமான முதல் படத்திலேயே கோல்டன் க்ளோப் விருதுகளையும், இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் பெற்று அசத்தினார்.
மாமன்னன் ஏ.ஆர்.ரஹ்மான்: ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடைசியாக மாமன்னன் படம் வெளியானது. முதன்முறையாக மாரி செல்வராஜுடன் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான் கதைக்கு தகுந்தபடி தனது இசையை செம்மையாகவே கொடுத்திருந்தார். படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களுக்குள் எளிதாகவே ஊடுருவியது. இதன் காரணமாக பலரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாராட்டை தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக வளர்ந்துவரும் இயக்குநர்களுடன் ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றமாட்டார் என்ற பிம்பமும் இதன் மூலம் உடைந்தது. அடுத்ததாக அவரது இசையமைப்பில் லால் சலாம் படம் வெளியாகிறது.
துருவ் விக்ரம் படம்: மாமன்னன் படத்துக்கு அடுத்ததாக ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி ஒரு தகவல் வெளியானது. அதாவது டாடா படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கணேஷ் கே பாபு அடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்குகிறார். அந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கப்போகிறார் என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பே வெளியான இந்தத் தகவல் குறித்து ரஹ்மான் எதுவும் விளக்கம் அளிக்காமல் இருந்தார்.
மறுத்த ரஹ்மான்: இந்நிலையில் அந்தத் தகவலுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் துருவ் விக்ரம் - கணேஷ் கே பாபு இயக்கப்போகும் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார் என பதிவிட்டிருந்தார். அதனைப் பார்த்த ரஹ்மான் மறுத்திருக்கிறார். அவர் அளித்திருக்கும் விளக்கத்தில், "துருவ்வும், கணேஷ் கே பாபுவும் இணையும் படத்துக்கு நான் இசையமைப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை. வதந்திகளை பரப்பாதீர்கள். துருவ்வுக்கும், கணேஷுக்கும் வாழ்த்துகள்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











