AR Rahman: “AR ரஹ்மான் பத்தி நான் பேசுனாலே அது தப்பா போய்டுது..” விளக்கம் கொடுத்த அமீர்!

சென்னை: பருத்திவீரன் சர்ச்சை இன்னும் முடியாத நிலையில், ஏஆர் ரஹ்மான் குறித்து அமீர் பேசியது வைரலாகி வருகிறது. ஏஆர் ரஹ்மான் பத்தி நான் பேசினாலே அது சர்ச்சையாகிறத் என அமீர் கூறியுள்ளார்.

AR Rahman: Director Ameer talk about AR Rahman is trending now

ஏஆர் ரஹ்மான் பத்தி பேசுனத தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க
பருத்திவீரன் பட விவகாரத்தில் அமீர் - ஞானவேல்ராஜா இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சுமார் 16 ஆண்டுகளாக தொடரும் இந்த பஞ்சாயத்தில் தற்போது பெரும்பாலான திரை பிரபலங்கள் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் அமீரை திருடன் என விமர்சித்திருந்தார் ஞானவேல்ராஜா.

இதனையடுத்து ஞானவேல்ராஜாவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. சசிகுமார், சமுத்திரகனி, பாரதிராஜா, கரு பழனியப்பன் ஆகியோரின் கண்டனங்கள் ஞானவேல்ராஜாவுக்கு நெருக்கடியை கொடுத்தன. அதன் பின்னர் அவர் அமீரிடம் வருத்தம் கேட்டு அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், ஏஆர் ரஹ்மான் குறித்து அமீர் பேசியதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அமீர் தனது முதல் படத்தில் இருந்தே யுவன் சங்கர் ராஜாவுடன் மட்டுமே கூட்டணி வைத்து வருகிறார். மெளனம் பேசியதே, ராம், பருத்திவீரன் படங்களில் அமீர் - யுவன் கூட்டணியின் மேஜிக் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அப்போதெல்லாம் ஏஆர் ரஹ்மான் குறித்து பேசிய அமீர், அவர் பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே இசையமைப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.

அமீரின் இந்த பேச்சு ஏஆர் ரஹ்மான் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மீண்டும் ஏஆர் ரஹ்மான் குறித்தும் அவரைப் பற்றிய தனது நிலைப்பாடு என்ன என்பதையும் அமீர் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ஏஆர் ரஹ்மான் பத்தி நான் கேட்டதை தப்பாக புரிந்துகொள்கிறார்கள். பத்து வருடங்களுக்கு முன்னர் ஏஆர் ரஹ்மான் இல்லாத படங்களே கிடையாது.

எந்தப் படமாக இருந்தாலும் அதில் ஏஆர் ரஹ்மான் கண்டிப்பாக இருப்பார். ஆனால் அது எல்லாமே பெரிய பட்ஜெட் படங்களாக தான் இருந்தது. இதனால் அந்தப் படங்களுக்கு சர்வதேச அளவில் நல்ல கவனம் கிடைத்தது. அதேபோல், காதல், ஆட்டோகிராஃப் போன்ற படங்களுக்கும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தால், அவைகளும் நல்ல ரீச் ஆகிருக்கும்.

சமீபத்தில் மாமன்னன் படத்தில் வடிவேலுவை பாட வைத்து, அந்தப் பாடலை பெரிய அளவில் கொண்டுச் சென்றார். இதனை ஏன் முதலிலேயே செய்திருக்கக் கூடாது என்பது தான் எனது கேள்வி. மற்றபடி ஏஆர் ரஹ்மான் மீது எந்த விமர்சனமும் இல்லை என இயக்குநர் அமீர் விளக்கம் கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X