AR Rahman: முதல் பட அட்வான்ஸ் கொடுக்க போன பிரபல இயக்குநர்... சர்ப்ரைஸ் தந்த AR ரஹ்மான்

சென்னை: அறிமுகமான ரோஜா படத்திலேயே முதல் தேசிய விருது வாங்கி பிரமிக்க வைத்தவர் ஏஆர் ரஹ்மான்.

ஆஸ்கர் விருதுகள் வரை வென்றுவிட்ட ஏஆர் ரஹ்மான் ஆரம்பத்தில் விளம்பரங்களுக்கு இசையமைத்து வந்தார்.

ஏஆர் ரஹ்மானை சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என அவரைத் தேடி சென்றுள்ளார் இயக்குநர் கதிர்.

 AR Rahman: Director Kathir opens up about his friendship with AR Rahman

ஆனால், அங்கு அவருக்கு ஏஆர் ரஹ்மான் கொடுத்த சர்ப்ரைஸ் குறித்து கதிர் மனம் திறந்துள்ளார்.

கதிருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஏஆர் ரஹ்மான்: மறைந்த நடிகர் முரளிக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது இதயம் திரைப்படம். இந்த மூவி வெளியான பின்னர் 'இதயம்' முரளி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் கதிர். கதிர் இயக்கிய இதயம் திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

அதன்பின்னர் கதிர் இயக்கிய உழவன், காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் ஆகிய படங்களுக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்தார். உழவன் படத்திலிருந்தே ஏஆர் ரஹ்மான் - கதிர் இடையே நெருங்கிய நட்பு உருவானது. ஏஆர் ரஹ்மானின் நெருங்கிய திரையுலக நண்பர்களில் கதிர் மிக முக்கியமானவர்.

 AR Rahman: Director Kathir opens up about his friendship with AR Rahman

இந்நிலையில் முதலில் ஏஆர் ரஹ்மானை சந்தித்தது குறித்தும், அவருடனான நட்பு பற்றியும் இயக்குநர் கதிர் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ள அவர், இதயம் வெற்றிக்குப் பின்னர் ஃபேண்டஸியாக ஒரு படம் இயக்க முடிவு செய்தேன். அதுதான் காதல் தேசம், அதனை சொந்தமாக தயாரிக்கலாம் என்றதும், அந்த கதைக்கேற்ற இசையமைப்பாளரை தேடினேன்.

அப்போது தான் ஏஆர் ரஹ்மான் குறித்து கதிருக்கு தெரியவர, அவரது தொலைபேசி நம்பரை வாங்கி பேசியுள்ளார். போனில் பேசிய ஏஆர் ரஹ்மான், கதிரை தனது ஸ்டுடியோவிற்கு வருமாறு கூறினாராம். இதனையடுத்து அங்கு சென்ற கதிர், காதல் தேசம் படம் குறித்து ஏஆர் ரஹ்மானிடம் பேசியுள்ளார். மேலும், ஏஆர் ரஹ்மான் ஓக்கே சொன்னால் உடனே அட்வான்ஸ் கொடுக்கவும் ரெடியாக இருந்துள்ளார் கதிர்.

 AR Rahman: Director Kathir opens up about his friendship with AR Rahman

அதுவரை ஏஆர் ரஹ்மான் விளம்பரங்களுக்கு மட்டும் தான் இசையமைத்துள்ளார் என கதிர் நினைத்திருந்தாராம். ஆனால், அதற்கு முன்பே ஏஆர் ரஹ்மான் ரோஜா படத்துக்கு இசையமைத்துள்ளது கதிருக்கு தெரியாது. இசை குறித்து பேச்சு சென்றுகொண்டிருக்கும் போது ரோஜா படத்தில் இருந்து சின்ன சின்ன ஆசை, புது வெள்ளை மழை ஆகிய பாடல்களை கதிருக்கு போட்டுக் காட்டியுள்ளார் கதிர்.

அதனைக் கேட்ட கதிருக்கு அப்போதே ஏஆர் ரஹ்மானை விட்டுவிடக் கூடாது, இனி இவர் தான் தனது படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டாராம். மேலும், உடனே தனது நண்பர் ஒருவரிடம் சென்று 10,000 ரூபாய் வாங்கி வந்து ஏஆர் ரஹ்மானுக்கு அட்வான்ஸ் கொடுத்துள்ளார். அதன்பின்னர் இருவருமே நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டதாக கதிர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X