twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கஜா புயல்... கனடாவில் இசை கச்சேரி நடத்தி வசூல் செய்கிறார் ஏஆர் ரஹ்மான்!

    கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக இசை கச்சேரி நடத்த ஏஆர் ரஹ்மான் முடிவு செய்துள்ளார்.

    |

    Recommended Video

    அள்ளிக் கொடுத்த லைகா | நிதியுதவி வழங்கிய நடிகர்கள் லிஸ்ட்- வீடியோ

    சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரி நடத்த திட்டமிட்டுள்ளார்.

    கஜா புயலின் தாக்குதலால் காவிரி டெல்டா மாவட்டங்கள் கண்ணீரில் தத்தளிக்கின்றன. ஆறு நாட்கள் ஆகியும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

    AR Rahman to donate for #gaja cyclone

    குறிப்பாக நாகை, கடலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறன. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏராளமானவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

    தமிழ் திரைத்துறையை சார்ந்தவர்களும் தங்களுடைய பங்களிப்பை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் தன்னுடைய பங்காக கனடா நாட்டில் நடைபெறவுள்ள தனது இசை கச்சேரியில் வரும் வசூலில் ஒரு பங்கை கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது," வரும் டிசம்பர் 24ம் தேதி டொரோன்டோவில் நடைபெறவுள்ள என்னுடைய இசை கச்சேரியில் வரும் பணத்தில் ஒரு பங்கு தமிழ்நாட்டின் கஜா புயல் நிவாரணத்துக்கு வழங்கப்படும். என்னுடன் ஜாவத் அலி, சிவமணி மற்றும் சானா மோசா ஆகியோரும் இசை கச்சேரியில் பங்கேற்கின்றனர்", என தெரிவித்துள்ளார்.

    English summary
    The oscar award winning music director AR Rahman has decided to donate a part of the revenue from his upcoming Canada concert for the Gaja cyclone relief fund.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X