AR Rahman: பிரிவினையை உண்டாக்கி.. அடிச்சு செத்து.. மாரி செல்வராஜை ஆஃப் பண்ண ஏ.ஆர். ரஹ்மான்!

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானிடம் மாமன்னன் பட இயக்குநர் மாரி செல்வராஜ் எழுப்பிய கேள்விக்கு அவரை ஆஃப் செய்யும் விதமாக இசைப்புயல் பதில் சொல்லி உள்ளார் என ஒரு வீடியோவை சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

வடிவேலு, பகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தை பற்றிய விவாதங்களும் பஞ்சாயத்துக்களும் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

AR Rahman epic reply to Mari Selvaraj in a recent interactions video trending

இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் மாரி செல்வராஜுக்கு நோஸ் கட் கொடுக்கும் விதமாக அந்த மாதிரியான படங்கள் பண்ண விருப்பமில்லை என்றே நேரடியாக சொல்லி விட்ட வீடியோ டிரெண்டாகி வருகிறது.

மாரி செல்வராஜ் கேள்வி: அடுத்து வர ஜெனரேஷன் இயக்குநர்கள் மக்களுக்கான படம் பண்ண வேண்டும் என்பது குறித்தும் சினிமா ஆர்ட் ஃபார்மாக மாற வேண்டும் என்பது பற்றியும் உங்கள் கருத்து என்ன? என மாரி செல்வராஜ் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை பார்த்து சூசகமாக ஒரு கேள்வியை முன் வைக்கிறார்.

அதற்கு உடனடியாக மைக்கை பிடித்துப் பேசும் ஏ.ஆர். ரஹ்மான் தனது கருத்தில் தான் தெளிவாக இருப்பதை விளக்கும் வீடியோவை நெட்டிசன்கள் மாரி செல்வராஜுக்கு ஆப்பு அடித்து விட்டார் ரஹ்மான் என அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

பிரிவினையை உண்டாக்கும் படம் பிடிக்காது: கமர்ஷியலுக்காக எடுக்கும் படத்தில் பிரிவினை வாதத்தை உண்டாக்கும் கதைகளை எடுத்து ஒருத்தரை ஒருத்தர் அடிச்சு செத்து அதெல்லாம் நல்லா இருக்காது. அந்த மாதிரியான படங்களை நான் ஆதரிக்க மாட்டேன் என ஓபன் ஸ்டேட்மென்ட்டையே சொல்லி ஏ.ஆர். ரஹ்மான் மாரி செல்வராஜை அப்படியே ஆஃப் செய்து விடுகிறார்.

மாரி செல்வராஜின் கேள்வியில் இருந்த மறைமுக அரசியலை உடைத்தெறியும் நோக்கிலேயே இந்த பதிலை ரஹ்மான் சொல்லி இருக்கிறார் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இன்னொரு புறம் மாரி செல்வராஜுக்கு ஆதரவாகவே ஏ.ஆர். ரஹ்மான் இப்படி பேசி உள்ளார் என மாரி செல்வராஜ் ரசிகர்கள் அந்த வீடியோவுக்கு கீழ் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

உதயநிதிக்காக ஒத்துக்கொண்ட ரஹ்மான்: பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களில் சந்தோஷ் நாராயணனை இசையமைக்க வைத்த மாரி செல்வராஜ் தெருக்குரல் அறிவு பிரச்சனை காரணமாக பா. ரஞ்சித் - மாரி செல்வராஜ் கூட்டணி முறிந்த நிலையில், இந்த படத்தில் சந்தோஷ் நாராயணனை அணுகவில்லை என்றும் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதாலும் இந்த படத்தின் கிளைமேக்ஸில் வில்லன் பகத் ஃபாசிலை உதயநிதி வெட்டிக் கொல்லாமல் அரசியல் ரீதியாக வீழ்த்தும் கதையையும் வடிவேலுவுக்கு கிடைக்கும் உயர் பதவி தான் கிளைமேக்ஸ் என்பதை அறிந்த பின்னர் தான் மாமன்னன் படத்துக்கு இசையமைக்கவே ஏ.ஆர். ரஹ்மான் ஒத்துக் கொண்டார் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X