AR ரஹ்மானே இப்படி பண்ணலாமா... தி கேரளா ஸ்டோரி இயக்குநருடன் கூட்டணியா..? கொந்தளிக்கும் ரசிகர்கள்
சென்னை: ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மானுக்கு கோலிவுட் ரசிகர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த மாதம் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடும் சர்ச்சைகளை கிளப்பியது.
இதனால் அந்தப் படத்தின் கருத்தியலுக்கு எதிராக ஏஆர் ரஹ்மான் உட்பட பலரும் குரல் எழுப்பினர்.
இப்படியான சூழலில் தி கேரளா ஸ்டோரி இயக்குநர் சுதிப்தோ சென்னுடன் ஏஆர் ரஹ்மான் இணைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏஆர் ரஹ்மானுக்கு ரசிகர்கள் கண்டனம்: ஆஸ்கர் உட்பட பல்வேறு சர்வதேச விருதுகளை வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தவர் ஏஆர் ரஹ்மான். தமிழ்நாட்டின் சொத்தாகவும் இந்தியாவின் அடையாளமாகவும் உலக அரங்கில் ஜொலித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியான மாமன்னன் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
தமிழில் அதிகமான படங்களுக்கு இசையமைத்து வரும் ஏஆர் ரஹ்மான், பாலிவுட் இயக்குநர்களுடனும் இணைந்துள்ளார். இந்நிலையில், எப்போதும் ஏஆர் ரஹ்மானை பாராட்டி வரும் அவரது ரசிகர்கள் தற்போது கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எல்லாவற்றுக்கும் காரணம் நேற்று வெளியான இந்தி படத்தின் ஒரு அறிவிப்புதான். அதாவது கடந்த மாதம் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடும் சர்ச்சையானது.
சுதிப்தோ சென் இயக்கிய தி கேரளா ஸ்டோரி படத்தில், கேரளாவில் 32 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டதாகவும், அதன்பின்னர் அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் காட்டப்பட்டது. மேலும், அவர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளில் உள்ளவர்களுக்கு பாலியல் அடிமைகளாக விற்கப்படுவதாகவும் சித்தரிந்தார். அப்பட்டமான இஸ்லாமிய மதவெறுப்பு திரைப்படமாக இது உருவாகியிருந்தது.
இந்தப் படத்திற்கு தடை விதிக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது ஏஆர் கேரளாவில் உள்ள மசூதியில் இந்து சமூகத்தைச் சேர்ந்த மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்ட வீடியோவை ஏஆர் ரஹ்மான் தனது டிவிட்டரில் ஷேர் செய்திருந்தார். இது தி கேரளா ஸ்டோரி படத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருந்தது.
இப்படியான நிலையில் இயக்குநர் சுதிப்தோ சென்னுடன் ஏஆர் ரஹ்மான் இணைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் ஏஆர் ரஹ்மானின் இந்த செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் AR ரஹ்மான் மீது அபரிமிதமான மரியாதை இருந்தாலும், அப்பட்டமான மதவெறுப்பை பரப்பும் திரைப்படத்தை இயக்கிய சுதிப்போ சென் உடன் ஏஆர் ரஹ்மான் இணைய கூடாது என குரல் எழுப்பி வருகின்றார்.
அதேநேரம், ஏஆர் ரஹ்மானுக்கு பணம்தான் மைய நோக்கமென்றால் இந்த படத்திற்கு பதிலாக Jonny sins போன்ற நடிகர்கள் நடிக்கும் ஆங்கிலப்படத்திற்கு கூட ரஹ்மான் இசையமைக்கலாம் என்று தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் சுதிப்தோ சென் இயக்கும் படம், சஹாராஸ்ரீ என்ற டைட்டிலில் தொழிலதிபர் சுப்ரதா ராய்யின் பயோபிக்காக உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் அபிஸியல் அப்டேட் நேற்று வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











