பூங்கொத்துடன் A.R ரகுமான் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட்.. டிரம்ஸ் சிவமணி மகன் திருமணத்தில் ருசீகரம்!

சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் உடன் கடந்த பல தசாப்தங்களாக பணியாற்றி வருபவர் டிரம்ஸ் சிவமணி. டிரம்ஸ் வாசிப்பதில் கில்லாடியான இவர் இசைப்புயலின் தீவிர ரசிகர். இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் உடன் 40 ஆண்டுகளுக்கு மேலாக நட்பாக உள்ள டிரம்ஸ் சிவமணியின் மகன் குமரன் திருமணத்தில் கலந்து கொண்ட ஏ.ஆர். ரகுமான் புதுமணத் தம்பதிகளுக்கு காஸ்ட்லியான கிஃப்ட் கொடுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

டிரம்ஸ் சிவமணியின் மகன் குமரன், தனது காதலி ஹர்ஷனாவை சில தினங்களுக்கு முன்னர் கரம் பிடித்தார். இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது. மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற திருமணத்தில் குடும்பத்தினர் மட்டும் இல்லாமல், திரைப் பிரபலங்கள் சிலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இந்நிலையில் நேற்று முன் தினம், டிரம்ஸ் சிவமணி மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

AR Rahman Gaves Costly Gift to Drums Sivamani Son Wedding Photos Goes Trending
Photo Credit:

குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், இயக்குநர் பாக்யராஜ், இயக்குநர் டி. ராஜேந்திரன், பாடகி மற்றும் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா, நகைச்சுவை நடிகர் செந்தில், மூத்த நடிகை நளினி, பாடகர் ஷங்கர் மகாதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

இசைப்புயல்: இந்த திருமணத்தில் கலந்து கொண்ட இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் மணமக்களுக்கு மேடையில் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் மற்றும் டிரம்ஸ் சிவமணி சுமார் 40 ஆண்டுகளாக நண்பர்களாக உள்ளார்கள். இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசைக்குழுவில் பணியாற்றி வரும் டிரம்ஸ் சிவமணி மீது ஏ.ஆர். ரகுமானுக்கு தனி பிரியமும் அக்கறையும் எப்போதும் இருந்து வந்துள்ளது. டிரம்ஸ் சிவமணியின் திருமணத்திற்கு சென்று வாழ்த்திய ஏ.ஆர். ரகுமான் இப்போது அவரது மகன் திருமணத்திற்கும் சென்று வாழ்த்தியுள்ளார்.

AR Rahman Gaves Costly Gift to Drums Sivamani Son Wedding Photos Goes Trending
Photo Credit:

காஸ்ட்லி கிஃப்ட்: இந்த திருமணத்தில் கலந்து கொண்ட ஏ.ஆர். ரகுமான் மணமக்களுக்கு மிகவும் காஸ்ட்லியான கிஃப்ட் ஒன்றைக் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது. மேலும் இந்த கிஃப்ட்டை திருமணத்திற்கு முன்னரே ஏ.ஆர் ரகுமான் வாங்கிக் கொடுத்துவிட்டார் எனவும் கூறப்படுகிறது. மேலும் சிவமணியின் மகனுக்கு மட்டும் இல்லாமல், மருமகளுக்கும் கிஃப்ட் வாங்கிக் கொடுத்துள்ளாராம் இசைப்புயல். அது என்ன காஸ்ட்லி கிஃப்ட் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். திருமணம் மற்றும் திருமண வரவேற்பு தொடர்பான பல புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X