பி.எம்.டபுள்யூ. கார் நம்பர் பிளேட்டில் ரஹ்மான் பெயர்: ரசிகரை திக்குமுக்காட வைத்த இசைப்புயல்

By Siva

சென்னை: பி.எம்.டபுள்யூ. கார் வாங்கி நம்பர் பிளேட்டில் ஐ லவ் ஏஆர்ஆர் என்று எழுதிய ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் தீவிர ரசிகர் சந்தர். அவர் விலை உயர்ந்த பி.எம்.டபுள்யூ. கார் வாங்கியுள்ளார். தனது கனவு காரை வாங்கிய சந்தர் அதன் நம்பர் பிளேட்டில் ஐ லவ் ஏஆர்ஆர் என்று எழுதியுள்ளார்.

AR Rahman gives surprise to a fan

ஏ.ஆர். ரஹ்மான் மீதுள்ள பாசத்தால் அப்படி செய்த அவர் தனது காருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் வெளியிட்டார்.

ட்விட்டரில் சந்தரின் காரை பார்த்த ரஹ்மானோ, பாதுகாப்பாக ஓட்டவும் என்று கூறி பதில் அளித்துள்ளார். இசைப்புயலே பதில் அளித்ததை பார்த்த சந்தரால் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.

இன்ஸ்டாகிராமில் சந்தரின் புகைப்படத்தை பார்த்துவிட்டு ரஹ்மான், கடவுள் ஆசிர்வதிப்பாராக என்று வாழ்த்தியுள்ளார். அந்த கமெண்ட்டையும் சந்தர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

சந்தரின் ட்வீட்டுகளை பார்த்த ரஹ்மான் ரசிகர்களோ, நீங்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர் இசைப்புயலே வாழ்த்திவிட்டார் என்று தெரிவித்துள்ளார். கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ள ரஹ்மான் தன் ரசிகருக்கு இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X