twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விரைவில் புவிவெப்பமயமாதல் குறித்த இசைத் தொகுப்பு.. ஏஆர் ரஹ்மான் அசத்தல் அறிவிப்பு!

    |

    திருச்சி: புவிவெப்பமயமாதல் குறித்த இசைத் தொகுப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

    திருச்சியில் நேற்று இரவு இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான் செய்தியாளா்களை சந்தித்தார். அப்போது பேசிய ஏஆர் ரஹ்மான், பெரிய நகரங்களில் மட்டும் நடந்து வந்த இசை நிகழ்ச்சி முதல்முதலாக திருச்சியில் பிப்ரவரி 15ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது.

    AR Rahman going to release music album, for global warming

    இந்நிகழ்ச்சிக்காக கடந்த நான்கு மாதங்கள் முன் தயாரிப்பில் ஈடுபட்டோம். முதல்முறையாக திருச்சி போன்ற நகரங்களில் நடக்கும், இது போன்ற இசை நிகழ்ச்சிக்கு மக்கள் எவ்வாறு வரவேற்பு அளிக்கிறார்கள் என்பதை பார்த்து விட்டு அடுத்தடுத்து இரண்டாம் கட்ட நகரங்களில் இசை நிகழ்ச்சியை நடத்துவோம்.

    ஓ மை கடவுளே படத்திற்கு 'மாஸ்டர்' படக்குழுவிடம் இருந்து இப்படி ஒரு சப்போர்ட்டா!ஓ மை கடவுளே படத்திற்கு 'மாஸ்டர்' படக்குழுவிடம் இருந்து இப்படி ஒரு சப்போர்ட்டா!

    புவிவெப்பமயமாதல் குறித்தான விழிப்புணா்வு இசை ஆல்பம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஹாலிவுட்டில் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது. இசை ஆல்பம் தயாரிப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்பு ஏப்ரலில் வெளியிடுவோம் இவ்வாறு அவர் கூறினார்

    பேட்டியின் போது, இமைகள் பொழுது போக்கு அமைப்பின் நிர்வாகிகள் வி.கோவிந்தராஜூலு, கே.கருணாநிதி, பின்னணி பாடகா்கள் ஹரிஹரன், பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனா்.

    English summary
    AR Rahman going to release music album, for global warming. It will be released on April month.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X