கிராமி விருது விழாவில் ஏஆர் ரஹ்மான்!
இசைத் துறையின் உயரிய விருதாக கருதப்படும் 'கிராமி விருது' வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.
ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 56-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரிலுள்ள ஸ்டேப்பில்ஸ் அரங்கில் இன்று நடைபெற்றது.

'ஸ்லம்டாக் மில்லினியர்' படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ள இந்திய இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான் இந்த கிராமி விருதினை ஏற்கனவே இரண்டு முறை வென்றுள்ளார்.
இன்று நடைபெற்ற 56-வது கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
இவ்விழாவில் அவர் பங்கேற்ற புகைப்படத்தை தனது 'டுவிட்டர்' மற்றும் பேஸ்புக் பக்கங்களிலும் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











