twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தற்கொலை செய்ய நினைத்த ஏ.ஆர். ரஹ்மான்: அதிர்ச்சி தகவல்

    By Siva
    |

    Recommended Video

    எனது 25 வயது வரை தற்கொலை செய்யவே எண்ணினேன் - ஏ.ஆர்.ரஹ்மான்

    மும்பை: 25 வயது வரை தற்கொலை செய்யும் எண்ணம் இருந்ததாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

    ஒரு ஆஸ்கர் விருது வாங்க எத்தனையோ பேர் ஏங்க, ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகள் வாங்கியவர் இசைப்பயுல் ஏ.ஆர். ரஹ்மான். அப்படிப்பட்டவர் தற்கொலை செய்ய நினைத்தது தெரிய வந்துள்ளது.

    இது குறித்து ஏ.ஆர். ரஹ்மான் கூறியிருப்பதாவது,

    அப்பா

    அப்பா

    25 வயது வரை தற்கொலை செய்யும் எண்ணம் இருந்தது. நான் வெற்றி பெற மாட்டேன். அது என்னால் முடியாது என்று தோன்றியது. என் அப்பா இறந்ததால் வாழ்க்கை சோகமாக இருந்தது. அது மட்டும் இன்றி அந்த நேரத்தில் பல விஷயங்கள் நடந்தன. அந்த அனுபவங்களாலேயே நான் பயமில்லாதவனாக மாறினேன்.

    பயம்

    பயம்

    அனைவருக்கும் மரணம் வரும். அனைத்து பொருளுக்கும் எக்ஸ்பயரி தேதி உண்டு, அப்படி இருக்கும்போது எதற்காக பயந்து கொண்டே இருக்க வேண்டும்?. சென்னையில் உள்ள என் வீட்டின் பின்புறம் ரெக்கார்டிங் ஸ்டுடியோவை கட்டிய பிறகே என் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. அதற்கு முன்பு வரை ஏதேதோ எண்ணங்கள் ஏற்பட்டன.

    போர்

    போர்

    என் தந்தையின் மரணம், அவர் வேலை பார்த்த விதத்தால் நான் பல படங்களை ஒப்புக் கொள்ளவில்லை. 35 பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் நான் இரண்டு படங்களை மட்டுமே ஒப்புக் கொண்டேன். நீ எப்படி தாக்குப்பிடிக்கப் போகிறாய் என்று அனைவரும் வியந்தார்கள். 12 முதல் 22 வயதுக்குள் அனைத்தையும் முடித்துவிட்டேன். வழக்கமான விஷங்களை செய்ய போர் அடித்தது. அதனால் அதை செய்ய விரும்பவில்லை.

    வெறுப்பு

    வெறுப்பு

    எனக்கு என் சொந்த பெயரான திலீப் குமார் பிடிக்கவில்லை. அந்த பெயரை ஏன் வெறுத்தேன் என்று கூட தெரியவில்லை. என் குணத்திற்கு அந்த பெயர் பொருத்தமாக இல்லை என்று நினைத்தேன். கடந்த காலத்தை விட்டுவிட்டு புதிய மனிதனாக ஆக விரும்பினேன். ஒரே விஷயத்தை செய்ய பிடிக்காது. வித்தியாசமான விஷயங்களை செய்யப் பிடிக்கும் என்கிறார் ரஹ்மான்.

    இசைக்கருவிகள்

    இசைக்கருவிகள்

    ரஹ்மானுக்கு 9 வயது இருந்தபோது அவரின் தந்தையான இசையமைப்பாளர் ஆர்.கே. சேகர் மரணம் அடைந்தார். அவரின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு பிழைக்க வேண்டியதாகிவிட்டது. அதனால் ரஹ்மான் மிக இளம் வயதில் இசைப்பணியை துவங்கிவிட்டார். ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றை கிருஷ்ணா த்ரிலோக் என்பவர் "Notes of a Dream: The Authorized Biography of AR Rahman" என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார்.

    English summary
    Music composer AR Rahman had suicidal thoughts till the age of 25. He hated his original name Dileep Kumar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X