இரவின் நிழலுக்கு இசை கொடுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்...பார்த்திபன் வெளியிட்ட தகவல்
சென்னை : நடிகரும், டைரக்டருமான பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 படம் தேசிய விருதினை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது அடுத்த படத்தின் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இந்த படத்திற்கு இரவின் நிழல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.
தற்போது இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பதாக பார்த்திபன் அறிவித்துள்ளார். சமீபத்தில் ரியாலிட்டி ஷோ ஒன்றில், மணிரத்னம் படத்தில் இசை அமைப்பது பற்றி கேட்கப்பட்டது. அப்போது பேசிய ரஹ்மான், தற்போது பார்த்திபன் இயக்கும் படம் ஒன்றிற்காக இசையமைத்து வருகிறேன். அதே போன்ற ஒரு பாடலை இதிலும் கொண்டு வர முயற்சி செய்து வருவதாக கூறினார்.
எப்பொருள் யார் யார் வாய்
ரஹ்மான் வெளியிட்ட இந்த தகவலை, திருக்குறளை மேற்கோள் காட்டி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார் பார்த்திபன். அந்த பதிவில், ஆமாம். ஏ.ஆர்.ரஹ்மான் இரவின் நிழல் படத்தில் உள்ளார். இந்த படத்தின் 3 பாடல்களை கையில் வைத்துள்ளது பெருமையாக உள்ளது. மற்றொரு ப்ரோமோஷன் பாடல் விரைவில் வரும். மிக மிக சந்தோஷம் என குறிப்பிட்டுள்ளார்.

20 ஆண்டுகளுக்கு பின் இணைவு
ரஹ்மானும், பார்த்திபனும் 2001 ம் ஆண்டு ஏலேலோ படத்தில் கூட்டணி அமைத்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் ஒன்றிணைந்துள்ளனர். ஒத்த செருப்பு படத்தை போன்று இரவின் நிழல் படமும் மற்றொரு சோதனை முயற்சி படமாக இருக்கும் என பார்த்திபன் ஏற்கனவே கூறி இருந்தார்.

உலக சினிமாவில் முதல் முறை
தேசிய விருது பெற்ற பிறகு பார்த்திபன் வெளியிட்ட வீடியோவில், உலகிலேயே இந்த மாதிரியான படம் உருவாவது இது தான் முதல் முறை. நான் பல படங்களை சரி பார்த்து விட்டேன். அந்த படங்களில் சில காட்சிகள் மட்டுமே சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டதாக உள்ளன. இந்த படம் ரிலீசாகும் போது நீங்களே புரிந்து கொள்வீர்கள், என்ன முறைகளை எல்லாம் கையாண்டுள்ளோம் என்று. இது தனித்துவமான ஒன்றாக இருக்கும். பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை உருவாக்குகிறேன். இதற்கு முன் நான் கையாளாத பலவற்றை செய்ய உள்ளேன் என கூறி இருந்தார்.

பிஸியான ஏ.ஆர்.ரஹ்மான்
ரஹ்மான் தற்போது தனது முதல் தயாரிப்பு படமான 99 சாங்ஸ் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இந்த படத்திற்கு கதை எழுதியதும் ரஹ்மான் தான். அத்துடன் மணிரத்னத்தில் பொன்னியின் செல்வன், சிவகார்த்திகேயனின் அயலான், விக்ரமின் கோப்ரா, கவுதம் மேனனின் நதிகளில் நீராடும் சூரியன் ஆகிய படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். நதியில் நீராடும் சூரியன் படத்தில் ஹீரோவாக சிம்பு நடிக்கிறார். மேலும் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுடன் அரட்டு என்ற படத்திலும் சிம்பு நடிக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











