A.R.Rahman - என்னது சிம்பு படத்துக்கு இசையமைக்கிறேனா?.. என்ன இதெல்லாம்.. கேள்வி எழுப்பிய ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னை: A.R.Rahman (ஏ.ஆர்.ரஹ்மான்) சிம்புவின் 48ஆவது படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக தகவல் வெளியானது.
உலக அளவில் பிரபலமான ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கர்கள், கோல்டன் குளோப் விருதுகள், கிராமி விருதுகள் என ஏகப்பட்ட விருதுகளை வென்றிருக்கிறார். அவர் சமீபகாலமாக மீண்டும் தமிழில் கவனத்தை அதிகம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அதன்படி அவரது இசையமைப்பில் பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2, பத்து தல, மாமன்னன் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

பட்டையை கிளப்பிய பாடல்கள்: இவற்றில் பத்து தல படத்தை தவிர்த்து மற்ற படங்கள் டீசண்ட்டான வரவேற்பையே பெற்றன. அதேபோல் பாடல்களை பொறுத்தவரை மேற்கூறிய அனைத்து படங்களின் பாடல்களும் பட்டையை கிளப்பின. குறிப்பாக மாமன்னன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அட்டகாசமாக அமைந்துவிட்டதாகவும்; தொடர்ந்து இப்படி அவர் வளரும் இயக்குநர்களுடன் பணியாற்ற வேண்டும் ரசிகர்கள் கோரிக்கை வைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
அடுத்த படம்: ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் அடுத்தாக லால் சலாம் படம் வெளியாகவிருக்கிறது. அந்தப் படத்தை ஐஸ்வர்யா இயக்க ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இதற்கிடையே துருவ் விக்ரமும் கணேஷ் கே பாபுவும் இணையும் படத்துக்கு ரஹ்மான் இசையமைப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அந்தத் தகவலில் உண்மை இல்லை என சமீபத்தில் விளக்கம் அளித்திருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
மீண்டும் சிம்புவுடன்: இந்தச் சூழலில் சிம்புவும், தேசிங்கு பெரியசாமியும் இணைந்திருக்கும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க கமிட்டாகியிருப்பதாக புதிய தகவல் ஒன்று இன்று காலையிலிருந்து ஓடிக்கொண்டிருந்தது. இதனையடுத்து ஏ.ஆர்.ரஹ்மானும், சிம்புவும் ஆறாவது முறை இணைந்திருக்கிறார்கள் என ரசிகர்கள் மகிழ்ச்சியோடு பேசிவந்தனர். தற்போது அதனை ஏ.ஆர்.ரஹ்மான் மறுத்திருக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்தில் அந்தத் தகவலை பகிர்ந்து, கேள்விக்குறியை எழுப்பியிருக்கிறார். இதனால் எஸ்டிஆர் ரசிகர்கள் அப்செட்டாகியுள்ளனர்.
எஸ்டிஆர் 48: முன்னதாக சிம்பு நடிப்பில் பத்து தல படம் வெளியானது. அந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து அவர் கமல் ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்தப் படத்துக்காக சிம்பு கடுமையாக உழைத்துவருகிறார். மேலும் சில பயிற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











