AR Rahman: மாமன்னன் AR ரஹ்மானுக்கு இவ்வளவு தான் சம்பளமா..? எல்லாம் உதயநிதிக்காக மட்டும் தான்!

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் கடந்த மாதம் 29ம் தேதி வெளியானது.

உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்கு AR ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

ஏஆர் ரஹ்மான் இசையில் 7 பாடல்களும், படத்தின் பின்னணி இசையும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் மாமன்னன் படத்திற்காக ஏஆர் ரஹ்மான் ரொம்பவே குறைவாக தான் சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

 AR Rahman has received a salary of Rs 5 crore for Maamannan

மாமன்னன் ஏஆர் ரஹ்மானின் சம்பளம்:மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் கடந்த 29ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வடிவேலுவுக்கு கம்பேக் கொடுக்கும் படமாக மாமன்னன் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை காமெடி கேரக்டரில் மட்டுமே நடித்துள்ள வடிவேலு, மாமன்னனில் மாஸ் காட்டியிருந்தார்.

அதேபோல், முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்ட உதயநிதிக்கும் மாமன்னன் முக்கியமான படமாக அமைந்துள்ளது. சமூகநீதி அரசியலை மிக அழுத்தமாக பேசி மக்கள் மத்தியில் பாசிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அதேநேரம் பரியேறும் பெருமாள், கர்ணன் திரைப்படங்கள் அளவிற்கு மாமன்னன் சுவாரஸ்யமாக இல்லை என மாரி செல்வராஜ் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

அதையெல்லாம் ஈடு செய்யும் விதமாக அமைந்தது ஏஆர் ரஹ்மானின் இசை தான். வழக்கமாக சந்தோஷ் நாராயணன் உடன் மட்டுமே கூட்டணி வைப்பார் மாரி செல்வராஜ். ஆனால், மாமன்னன் படத்திற்காக உதயநிதி தனது கடைசிப் படம் எனக் கூறி ஏஆர் ரஹ்மானை சம்மதிக்க வைத்துள்ளார். அதேபோல், முதலில் ஒரு பாடல் போதும் என முடிவு செய்திருந்த மாரி செல்வராஜ்ஜுக்கு 7 பாடல்களையும் வாரி வழங்கியிருந்தார்.

பாடல்கள் மட்டும் இல்லாமல் பின்னணி இசையிலும் ஏஆர் ரஹ்மானின் மேஜிக் செம்மையாக ஒர்க்அவுட் ஆகியிருந்தது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு கிராமத்துப் பின்னணியில் உருவான படத்திற்கு AR இசையமைத்திருந்தது ரசிகர்களுக்கும் விருந்தாக அமைந்தது. மாமன்னன் இசை வெளியீட்டு விழா முதல், படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளிலும் செம்ம ஜாலியாக கலந்துகொண்டார் ஏஆர் ரஹ்மான். இதானால், மாமன்னன் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகமானது.

இந்நிலையில், மாமன்னன் படத்திற்காக ஏஆர் ரஹ்மான் ரொம்பவே குறைவான சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக ஒரு படத்துக்கு 10 முதல் 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் ஏஆர் ரஹ்மான். ஆனால், மாமன்னன் படத்திற்கு 5 கோடி மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏஆர் ரஹ்மானுக்கு இது ரொம்பவே குறைவான சம்பளம் என்றாலும், இதுகுறித்து உண்மையான தகவல்கள் வெளியாகவில்லை.

முன்னதாக மாமன்னன் படத்தின் வெற்றியை படக்குழுவினர் ஏஆர் ரஹ்மானுடன் கொண்டாடியிருந்தனர். இயக்குநர் மாரி செல்வராஜ், உதயநிதி, கீர்த்தி சுரேஷ் மூவரும் ஏஆர் ரஹ்மான் வீட்டிற்கே சென்று மாமன்னன் வெற்றியை கொண்டாடினர். ஏஆர் ரஹ்மானை கேக் வெட்ட வைத்து மாமன்னன் வெற்றியை கொண்டாடினார் உதயநிதி. அப்போது ஏஆர் ரஹ்மானின் மகன் அமீனும் அருகில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X