சூர்யாவுக்கு ஷாக் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்.. படத்திலிருந்து விலகிட்டாராம்.. அடி மேல் அடிதானோ

சென்னை: சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. 2,000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அடித்து கூறிய சூழலில் படம் 200 கோடி ரூபாயைக்கூட வசூலிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சூர்யா அப்செட்டாகியிருக்கிறார். அடுத்ததாக அவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிக்கிறார். இதில் திரிஷா ஹீரோயினாக நடிக்கவிருக்கும் சூழலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக இருந்தது.

சூர்யாவின் நடிப்பில் சிவாவின் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் கங்குவா. இதில் அவருடன் திஷா பதானி, நட்டி, கருணாஸ், யோகிபாபு, போஸ் வெங்கட் என பலர் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்தப் படத்துக்கு ஏற்றி வைத்திருந்தார்கள் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும், ஹீரோ சூர்யாவும். அதுமட்டுமின்றி பாடலாசிரியர் மதன் கார்க்கியோ, கங்குவா படம் பத்து பாகங்களாகக்கூட வரும். அதற்கான அம்சங்கள் கதையில் இருக்கின்றன என்றெல்லாம் பேசினார்.

suriya rj balaji ar rahman

படுதோல்வி: என்ன இவ்வளவு ஹைப் ஏத்துறாங்களே என்று ரசிகர்கள் சந்தேகப்பட ஆரம்பித்தனர். கடந்த மாதம் வெளியான கங்குவா திரைப்படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது படக்குழுவினர் ஏற்றிவிட்ட ஹைப் அளவுக்கு படத்தில் ஒன்றுமே இல்லை. இசையோ, நடிப்போ, மேக்கிங்கோ எதிலுமே புதுமை இல்லையே என்று பலரும் பேசினார்கள். இதன் காரணமாக படத்துக்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொட்டின.

களத்தில் குதித்த ஜோதிகா: தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்துகொண்டிருந்ததால் நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா கங்குவாவுக்கு சப்போர்ட் செய்தும்; விமர்சகர்களை விமர்சித்தும் இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதனைக் கண்டு கடுப்பான நெட்டிசன்கள் ஜோதிகாவையும் வறுத்தெடுக்க தொடங்கினார்கள். அஞ்சான் படத்துக்கு பிறகு கங்குவா திரைப்படம்தான் சூர்யாவுக்கு பெரும் மன உளைச்சலை கொடுத்திருக்கும் என்றும் திரைத்துறையினர் ஓபனாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.ஜே.பாலாஜியுடன் படம்: கங்குவா படம் கொடுத்த அடியை எப்படியாவது மறக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் சூர்யா. அடுத்ததாக அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர்; ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்துவருகிறார். இதன் பூஜை சமீபத்தில்தான் போடப்பட்டது. இதில் ஹீரோயினாக திரிஷா நடிக்கிறார். சூர்யாவை வைத்து பாலாஜி எந்த மாதிரியான படத்தை கொடுக்கப்போகிறார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்களிடம் ஆவல் அதிகரித்திருக்கிறது.

விலகிய ஏ.ஆர்.ரஹ்மான்: இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞர் கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக இருந்தது. படத்தின் அறிவிப்பு போஸ்டரிலும் அவர் பெயர் இருந்தது. ஆனால் இப்போது படத்தில் ஒளிப்பதிவாளராக ஜிகே விஷ்ணு கமிட்டாகியிருக்கிறார். அதுகுறித்த போஸ்டரும் வெளியாகியிருக்கிறது. ஆனால் அதில் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் இல்லை. எனவே இந்தப் படத்திலிருந்து அவர் வெளியேறியிருப்பது உறுதியாகிவிட்டதாகவே கருதப்படுகிறது. எதற்காக ரஹ்மான் வெளியேறினார் என்பது குறித்த விவரம் தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X