AR Rahman: விவாகரத்து வேதனையில் இசைப்புயல் A.R.R.. ஆறுதலாக வந்த ஹாலிவுட் விருது - விவரம்!
சென்னை: நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் நடிப்பில் இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் மிக நீண்ட கால இடைவெளியில் உருவாக்கப்பட்டு வெளியான படம் ஆடுஜீவிதம். இந்த படம் கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. கோட் லைஃப் என்ற பெயரில் மற்ற மொழிகளில் இந்தப் படம் ரிலீஸ் ஆனது. ஆடு ஜீவிதம் படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்திருந்தார். இவரது நடிப்பு பலரது மத்தியில் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். படத்தின் பின்னணி இசையை கிராமி விருதுகளுக்கு அனுப்பமுடியவில்லை. அதற்கு காரணம், கிராமி விருதுகள் லிமிட்டேசன்ஸின் விதிமுறைகளில் அடங்கக்கூடிய கால அளவில் ஆடு ஜீவிதம் படத்தின் பின்னணி இசை இல்லை எனவும், விதிமுறைகளை விடவும் அதிகமாக இருந்ததாகவும் ஏ.ஆர் ரஹ்மானே தெரிவித்தார். இந்நிலையில், ஆடு ஜீவிதம் படத்திற்காக HMMA விருதினை ஏ.ஆர். ரஹ்மான் வென்றுள்ளார்.

ஆடு ஜீவிதம் படம் உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட மலையாள நாவலான ஆடு ஜீவிதம் நாவலினைத் தழுவி எடுக்கப்படுவதாக, படக்குழு தரப்பில் இருந்து முன்பே அறிவிப்பு வெளியானது. படம் நேரடி மலையாளப் படமாக வெளியானாலும், தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. ஆடு ஜீவிதம் படத்தினைப் பொறுத்தவரையில் ரசிகர்கள் மத்தியில், குறிப்பாக உலக சினிமாக்களை விரும்பும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது.
ஆடு ஜீவிதம்: ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல், 2008 ஆம் ஆண்டு மலையாளத்தில் அதிகம் விற்பனையான மலையாள நாவலான பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவலின் தழுவல்தான் இந்தப் படம். இந்த நாவல் கேரளாவைச் சேர்ந்த நஜீப் என்பவரின் நிஜ வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்தப் படத்தில் நஜீப்பின் கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்திருந்தார். இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், வெளிநாடுகளில் வேலைக்காக புலம் பெயர்ந்து வாழக்கூடிய தங்களது குடும்பத்தினரை நினைத்து பலரும் கண்ணீர் வடித்தனர்.

விருது: படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரும்பாலும் பாராட்டப்பட்டது. அதிலும் பின்னணி இசை நிச்சயம் பல விருதுகளை வெல்லும் என பல விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் படத்தின் பின்னணி இசைக்கு ஹாலிவுட் மியூசிக் மிடியா விருது (HMMA) வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் படங்களின் பிரிவில் இந்தப் படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது படக்குழுவினரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆறுதல்: மேலும் ஆடுஜீவிதம் படத்தின் ரசிகர்களும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் ரசிகர்களுக்கும் இந்த விருது மகிழ்ச்சியை ஏற்பத்தியுள்ளது. இது தொடர்பாக படத்தின் இயக்குநர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக அவர், இந்தப் படத்தினை திரைக்கு கொண்டுவர கடினமாக உழைத்த அனைவருக்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், விவாகரத்து வேதனையில் இருக்கும் ஏ.ஆர் ரஹ்மானுக்கு இந்த விருது ஆறுதலைக் கொடுக்கும் எனத் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











