AR Rahman: அகாடமி விருது வாங்கிய ஏ.ஆர். ரகுமான்.. உலக அளவில் இசைப்புயல் கலக்குறாரேப்பா

வாஷிங்டன்: இந்திய இசையை உலக அரங்கில் தலைநிமிர வைத்த இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவர் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான். இரண்டு ஆஸ்கர் விருதுகள், கோல்டன் குளோப், பாஃப்டா உள்ளிட்ட ஏராளமான சர்வதேச அங்கீகாரங்களை பெற்றுள்ள அவர், தற்போது மேலும் ஒரு கவுரவத்தை பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஏ.ஆர். ரகுமான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதாவது, அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரகுமானுக்கு 'Academy of Achievement Award' வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெற்றுக் கொண்ட பிறகு, அதுதொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரகுமான், "I am deeply humbled to receive the Academy of Achievement Award this evening" என்று பதிவிட்டுள்ளார். அதாவது, "இன்று மாலை Academy of Achievement விருதைப் பெறுவதில் மிகவும் பணிவும் பெருமையும் கொள்கிறேன்" என்ற அர்த்தத்தில் அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இப்படி இருக்கையில், ரகுமான் பகிர்ந்துள்ள புகைப்படமும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அந்த புகைப்படத்தில், உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பீட்டர் ஜாக்சனுடன் இணைந்து ஏ.ஆர். ரகுமான் விருதை கையில் ஏந்தியபடி நிற்கிறார். பின்னணியில் Academy of Achievement நிகழ்ச்சியின் பிரம்மாண்ட மேடை அலங்காரமும் இடம்பெற்றுள்ளது.

உலக அளவில்: இந்நிலையில், இந்த விருது சாதாரண அங்கீகாரம் அல்ல என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். உலகின் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த நபர்களுக்கு வழங்கப்படும் இந்த கவுரவத்தை, இந்திய இசையின் முகமாக விளங்கும் ஏ.ஆர். ரகுமான் பெற்றிருப்பது மிகப்பெரிய பெருமை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

AR Rahman Honoured with Academy of Achievement Award Fans Celebrate Global Recognition

ஆஸ்கர் மேடை: குறிப்பாக, தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய ரகுமான், பின்னர் இந்திய சினிமாவையே தாண்டி ஹாலிவுட் வரை சென்று சாதனை படைத்தார். 'ரோஜா' முதல் 'ஸ்லம்டாக் மில்லியனர்' வரை அவரது இசை பயணம் உலகளவில் பாராட்டப்பட்டது. ஆஸ்கர் மேடையில் இந்தியாவின் பெயரை ஒலிக்க வைத்த சில கலைஞர்களில் ஒருவராகவும் அவர் திகழ்கிறார்.

மற்றொருபுறம், இசையமைப்பாளர் மட்டுமின்றி பாடகர், தயாரிப்பாளர், தொழில்நுட்ப ஆர்வலர், இசைக் கல்வி வளர்ச்சிக்காக செயல்படும் ஆளுமை என பல பரிமாணங்களில் ரகுமான் தொடர்ந்து இயங்கி வருகிறார். அதனால் தான் அவர் பெறும் ஒவ்வொரு சர்வதேச அங்கீகாரமும் இந்திய ரசிகர்களால் தனிப்பட்ட வெற்றியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அகாடமி விருது: இப்படி இருக்கையில், ஏ.ஆர். ரகுமான் வெளியிட்டுள்ள இந்த பதிவு சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். உலகின் மிக உயரிய இசை விருதுகளையும், சர்வதேச அங்கீகாரங்களையும் ஏற்கனவே பெற்றிருந்தாலும், புதிய கவுரவங்கள் தொடர்ந்து ஏ.ஆர். ரகுமானை தேடி வருவது அவரது சாதனைகளின் உயரத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. வாஷிங்டனில் வழங்கப்பட்டுள்ள இந்த 'Academy of Achievement Award' தற்போது இந்திய திரையுலக ரசிகர்கள் மத்தியில் பெருமிதத்துடன் பேசப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X