சுயாட்சி கேட்கும் ரஹ்மான்?: தலக்கு தில்ல பாத்தியா
Recommended Video
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இன்று போட்டுள்ள ட்வீட் தமிழ் ரசிகர்களை பெருமகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு கிளம்பியதில் இருந்து இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தினமும் ஓரிரு வார்த்தை தான் ட்வீட் செய்கிறார் ஆனால் அது வைரலாகிவிடுகிறது. முன்னதாக அவர் பஞ்சாபில் தமிழ் பரவுகிறது என்று போட்ட ட்வீட்டை பார்த்து சிலர் அவரை ஆன்டி இந்தியன் என்றார்கள்.

இந்நிலையில் அவர் இன்று அட்டானமஸ்(சுயாட்சி) என்ற வார்த்தையை மட்டும் எழுதி அதற்கான அர்த்தத்தை தெரிவிக்கும் கேம்ப்ரிட்ஜ் அகராதியின் லிங்க்கை கொடுத்து ட்வீட் செய்துள்ளார்.
அவர் என்னவோ அட்டானமஸ் என்று மட்டும் தான் தெரிவித்தார். அதை பார்த்த தமிழர்களோ தல, நீ வேற லெவல். மத்திய அரசுக்கு எப்படி இப்படி தினமும் பொளேர்னு போடுகிறீர்கள் என்று கேட்டு உசுப்பேற்றியுள்ளனர். சிலரோ எங்க தலக்கு தில்ல பாத்தியா என்று கூறி வடிவேலுவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
ரஹ்மான் சாரின் இந்த ட்வீட் மத்திய அரசுக்கு தான். வர வர தலைவர் ட்வீட் செய்வதில் வேற லெவலுக்கு போய்க் கொண்டிருக்கிறார். லவ் யூ ரஹ்மான் சார் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் ட்விட்டரில் மேலும் கூறியிருப்பதாவது, ஒத்த வார்த்தையில் மத்திய அரசுக்கு தகவல் தெரிவிப்பது எல்லாம் தனி தைரியம். சும்மா இருக்கும் ஆளை சீண்டினால் இப்படித் தான்.
கலாய்க்கும் மூடில் இருக்கிறார் ரஹ்மான் சார். இனி தினமும் கச்சேரி தான் போன்று. என்ன தலைவா, தினமும் ஃபோரும், சிக்ஸுமாக அடிக்கிறீர்கள். வாழ்த்துக்கள். ரஹ்மான் குசும்புக்காரராக இருக்கிறாரே. ஆனால் அதுவும் நன்றாக உள்ளது. கிடைக்கும் இடத்தில் எல்லாம் ஆப்பு வைக்கிறியே சிவாஜி. நீங்க என்ன சொன்னாலும் சில மரமண்டைகளுக்கு உரைக்காது என்று தெரிவித்துள்ளனர்.
ஒரு காலத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன் ட்வீட் செய்வதை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தார்கள். தற்போதோ ரஹ்மான் இன்று என்ன ஆப்பு வைப்பாரோ என்பதை பார்க்கவே பலர் ட்விட்டர் பக்கம் வருகிறார்கள். இசைப்புயலின் இந்த ஊமக்குசும்பு ட்வீட்டுகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. தமிழன்டா, ரஹ்மான்டா, ஆமாடா என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











