ஏஆர் ரஹ்மான்-ஜெயம் ரவி... ஜீவா-அர்ஜுன்... அதிரடி கட்டும் வேல்ஸ் பிலிம்ஸ்... இயக்குநர் யார்?

சென்னை: கோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம்ஸ், பங்குச் சந்தையில் களமிறங்கியுள்ளது.

இதன் தொடக்க விழா சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இதில், சரத்குமார், பிரசாந்த், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜீவா, ஆரி அர்ஜுனன், ஆரவ், Hiphop தமிழா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய ஐசரி கணேஷ், ஜெயம் ரவியின் 32வது படம் உட்பட மேலும் சில படங்களின் சூப்பர் அப்டேட்களை வெளியிட்டுள்ளார்.

பங்குச் சந்தையில் வேல்ஸ் ஃபிலிம்ஸ்

பங்குச் சந்தையில் வேல்ஸ் ஃபிலிம்ஸ்

கோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம்ஸ், பங்குச் சந்தை வணிகத்தில் களமிறங்கியுள்ளது. இதனையடுத்து அறிமுகப்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சரத்குமார், பிரசாந்த், ஜெயம் ரவி, ஜீவா ஆகியோருடன் இயக்குநர்கள் சிலரும் கலந்துகொண்டனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் தலைவரான டாக்டர் ஐசரி கே கணேஷ் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.

ஏஆர் ரஹ்மான் - ஜெயம் ரவி காம்போ

ஏஆர் ரஹ்மான் - ஜெயம் ரவி காம்போ

இந்த விழாவில் பேசிய ஐசரி கே கணேஷ் வேல்ஸ் பிலிம்ஸ் தற்போது 5 திரைப்படங்களை வெளியிடவுள்ளது. ஐந்து படங்களை தயாரித்து வருவதோடு, மேலும் 5 படங்களின் தயாரிப்பு பணிகளை தொடங்கியுள்ளதாகக் கூறினார். இதில் ஜெயம் ரவியின் 32வது திரைப்படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக இந்தப் படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பதாக ஐசரி கே கணேஷ் தெரிவித்தார். பொன்னியின் செல்வனுக்குப் பிறகு ஜெயம் ரவி நடிக்கும் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

JR 30 பிரம்மாண்டத்தின் உச்சம்

JR 30 பிரம்மாண்டத்தின் உச்சம்

ஜெயம் ரவி - ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாக ஐசரி கே கணேஷ் தெரிவித்துள்ளார். அதன்படி, இந்தப் படத்திற்கு 100 கோடி வரை பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், பான் இந்தியா படமாக வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் இந்தப் படத்தின் இயக்குநர் யார் என இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழனாக நடித்திருந்தார் ஜெயம் ரவி. தொடர்ச்சியாக இறைவன், சைரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ஜீவா - அர்ஜுன் கூட்டணி

ஜீவா - அர்ஜுன் கூட்டணி

அதேபோல், வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் இன்னொரு படத்தில் ஜீவா - அர்ஜுன் இணைந்து நடிப்பதாகவும் ஐசரி கே கணேஷ் தெரிவித்துள்ளார். ஏ.எல் விஜய் இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளதாகவும் அப்டேட் கொடுத்துள்ளார் ஐசரி கே கணேஷ். முக்கியமாக இந்தப் படம் பான் இந்தியா ஜானரில் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த இரண்டு படங்களின் அஃபிஸியல் அப்டேட் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X