சிம்புவின் STR 48ல் இணைகிறாரா ஏஆர் ரஹ்மான்... இதுதான் அந்தப் படமா?: கமலின் பக்கா மூவ்!
சென்னை: சிம்புவின் பத்து தல படத்தின் ஆடியோ லான்ச் ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியுடன் நடைபெறுகிறது.
இந்த விழாவில் சிம்பு நடிக்கவுள்ள STR 48 படம் பற்றிய மேலும் சில அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக STR 48 படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட வாய்ப்புள்ளதாம்.
அதன்படி, வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களைத் தொடர்ந்து STR 48-க்கும் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கலாம் என சொல்லப்படுகிறது.

பத்து தல ஆடியோ லான்ச்
சிம்புவின் பத்து தல வரும் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப் படத்தின் ஆடியோ லான்ச், ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள பத்து தல படத்தின் பாடல்கள் லைவ் பெர்பாமன்ஸ் செய்யப்படுகின்றன. சிம்பு, ஏஆர் ரஹ்மான், பிரியா பவானி சங்கர், கெளதம் கார்த்திக், இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

STR 48 படத்தின் அப்டேட்
பத்து தல ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், STR 48 படத்தின் மேலும் சில அப்டேட்கள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல் தயாரிக்கும் இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இதுதவிர வேறு எந்த அப்டேட்டையும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில், பத்து தல இசை வெளியீட்டு விழாவில் STR 48 படத்தின் இசையமைப்பாளர் யார் என அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

மீண்டும் இணையும் கூட்டணி
மாநாடு படத்திற்குப் பின்னர் சிம்புவின் நடிப்பில் கடந்தாண்டு வெந்து தணிந்தது காடு வெளியானது. இதற்கும் தற்போது வெளியாகவுள்ள பத்து தல படத்திற்கும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிம்புவின் STR 48 படத்திலும் ஏஆர் ரஹ்மான் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றிய அபிஸியல் அப்டேட் பத்து தல இசை வெளியீட்டு விழாவில் வெளியாக வாய்ப்புள்ளதாம்.

கமலின் பக்கா மூவ்
STR 48 படத்திற்காக வெயிட்டை குறைத்து செம்ம ஸ்லிம்மாக ஆளே மொத்தமாக மாறிவிட்டார் சிம்பு. தாய்லாந்து சென்றிருந்த சிம்பு மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை கற்றுக் கொண்டதோடு, உடல் எடையையும் குறைத்துவிட்டார். காளை பட சிம்பு போல சென்னை திரும்பிய அவரின் போட்டோஸ் டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதனிடையே கமல் - ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் தலைவன் இருக்கிறான் என்ற டைட்டிலில் ஒரு படம் ஆரம்பிக்கப்பட இருந்தது. ஆனால், இந்தப் படம் இன்னும் தொடங்கவில்லை, இனிமேலும் டேக் ஆஃப் ஆகும் என்ற நம்பிக்கையும் இல்லை.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனரில்
அதனால், கமல் தனது தலைவன் இருக்கிறான் படத்தை சிம்புவை நடிக்க வைத்து தயாரிக்கலாம் என சொல்லப்படுகிறது ஏற்கனவே தலைவன் இருக்கிறான் படத்திற்காக ஏஆர் ரஹ்மான் இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து வைத்திருந்தார். தற்போது அதனை இந்தப் படத்திற்காக பயன்படுத்த முடிவெடுத்துவிட்டார்களாம் ஏஆர் ரஹ்மானும் கமலும். ஆனாலும், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.

சிம்பு ரசிகர்கள் எதிர்பார்ப்பு
விக்ரம் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிம்புவும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது "கமல் சார் நடித்த எதாவது ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் நடிக்க வேண்டும், அல்லது அவரது படத்தை ரீமிக்ஸ் செய்ய வேண்டும்" என விருப்பம் தெரிவித்தார் சிம்பு. அதற்கு பதிலளித்த கமல், "சிம்பு தன்னுடன் இணைந்து நடித்தால் அதுவே எனக்கு மகிழ்ச்சி" எனக் கூறியிருந்தார். STR 48 படத்தில் கமலும் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வருவதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











