வடிவேலுக்கு செம்ம போட்டியாக இருக்கும் ஏ.ஆர். ரஹ்மான்
சென்னை: வடிவேலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் எப்படி போட்டியாக இருக்க முடியும் என்று தானே நினைக்கிறீர்கள்?
மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மிகவும் பிடித்தவர் வடிவேலு தான். அவரின் முக பாவனைகளை வைத்து யாரை வேண்டுமானாலும், எந்த சூழலையும் கலாய்க்கிறார்கள்.

வடிவேலுவின் பல பாவனைகளை வைத்து மீம்ஸ் போடுபவர்களின் லேட்டஸ்ட் செல்லம் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். அந்த மனுஷன் நிகழ்ச்சி ஒன்றில் சாதாரணமாக சிரித்தபோது எடுத்த புகைப்படம் தான் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தற்போதைக்கு பிடித்த புகைப்படம்.
அந்த ஒரேயொரு புகைப்படத்தை வைத்து அனைத்து விஷயங்களையும் கலாய்க்கிறார்கள். ரஹ்மானின் புகைப்படம் யாரை வேண்டுமானாலும் கலாய்க்க அவ்வளவு கச்சிதமாக உள்ளது.
அப்படி என்றால் ரஹ்மான் வடிவேலுக்கு போட்டி தானே?
Comments


Click it and Unblock the Notifications