பாலாவுடன் முதன்முறையாக இணையும் ஏஆர்.ரஹ்மான்... 3 ஹீரோக்கள் சப்ஜெக்ட்!

சென்னை: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சகாப்தம் இயக்குனர் பாலா. வர்மா திரைப்படத்தினால் சில சரிவுகளை சந்தித்தார்.

இதையடுத்து அவருடைய அடுத்த படம் என்னவாக இருக்கும், எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டபோனது.

அடுத்த படத்திற்கு முதல் முறையாக இசை புயல் ஏ. ஆர். ரஹ்மான் உடன் பாலா இணைய போவதாக செய்திகள் இணையத்தில் கசிந்து வருகின்றன.

மீண்டெழுவாரா பாலா?

மீண்டெழுவாரா பாலா?

எப்போதும் சொந்தமாக கதையை தயாரித்து படமெடுக்க கூடியவர் பாலா. முதல் முறையாக நடிகர் விக்ரமுடன் உள்ள நட்புக்காக விக்ரமின் மகன் நடிகர் துருவ்-ஐ வைத்து அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என மறு ஆக்கம் செய்தார். அந்த படத்தை தயாரிப்பு நிறுவனம் நிராகரித்து பாலாவின் திரை வாழ்வில் ஒரு சரிவை ஏற்படுத்தியது. இந்த சரிவில் இருந்து பாலா மீண்டெழுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

கிராமப்புற படம்

கிராமப்புற படம்

பிதாமகன், அவன் இவன் போன்ற டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்களை இயக்கிய பாலா முதல் முறையாக மூன்று ஹீரோக்களை வைத்து இயக்க உள்ளார். அதர்வா, உதயநிதி ஸ்டாலின், ஜீ.வி. பிரகாஷ் என மூன்று நடிகர்களை வைத்து கிராமப்புற படமாக தயாராக உள்ளது பாலாவின் அடுத்த படைப்பு.

உதயநிதிக்கு உதயமாக இருக்குமா?

உதயநிதிக்கு உதயமாக இருக்குமா?

உதயநிதி தற்போது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் Article-15 படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார் அதையடுத்து இயக்குனர் மகிழ் திருமேனியின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இதெல்லாம் முடிந்த பிறகு பாலாவுடன் முதல் முறையாக இணைய உள்ளார் என தெரிகிறது. இது வரையில் உதயநிதியின் நடிப்பு பெரிதும் பேசப்படவில்லை அது பாலாவின் படத்தில் மாறி அமையுமா என்பது காத்திருந்து பார்ப்போம்

இரண்டாவது முறையாக

இரண்டாவது முறையாக

அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம், தள்ளி போகாதே, லோக்கல் ட்ரைன், ஒத்தைக்கு ஒத்த எனவும் ஜீ.வி. பிரகாஷ் நடிப்பில் பேச்சிளர், ஆயிரம் ஜென்மங்கள், ஜெயில், காதலை தேடி நித்யானந்தா என படவரிசை நீண்டுள்ளது. பாலாவுடன்அதர்வா பரதேசி படத்திலும், ஜீ. வி. பிரகாஷ் நாச்சியார் படத்திலும் இணைந்து பணியாற்றி உள்ளனர். அதர்வா - ஜீ.வி. பிரகாஷ் ஆகியோர் பாலாவுடன் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X