AR Rahman: துருவ் விக்ரம், டாடா இயக்குநர் கூட்டணியில் AR ரஹ்மான்..? இறங்கி அடிக்கும் இசைப்புயல்!

சென்னை: சீயான் விக்ரமின் மகன் துருவ் ஆதித்யா வர்மா திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து அவரது அப்பா விக்ரம் உடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மஹான் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது டாடா இயக்குநர் கணேஷ் கே பாபுவின் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

லைகா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 AR Rahman joins Dhruv Vikram and Dada director Ganesh K Babus movie

துருவ் விக்ரமுடன் இணையும் ஏஆர் ரஹ்மான்:வெரைட்டியான கேரக்டர்களில் நடித்து பிரபலமானவர் சீயான் விக்ரம். அவரது மகன் துருவ் விக்ரமும் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். தெலுங்கில் வெற்றிப் பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் அறிமுகமான துருவ் விக்ரமுக்கு ரசிகர்களிடம் நல்ல ரீச் கிடைத்தது. அதன்பின் அவரது அப்பா விக்ரமுடன் இணைந்து மகான் படத்தில் நடித்திருந்தார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மகான் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியானது. துருவ் விக்ரம் நடித்த முதல் இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவிருந்த படமும் ட்ராப் ஆனது. இந்நிலையில், டாடா இயக்குநர் கணேஷ் பாபுவின் புதிய படத்தில் துருவ் விக்ரம் கமிட்டாகியுள்ளாராம்.

கவின், அபர்ணா நடித்த டாடா படத்தை இயக்கிய கணேஷ் பாபு, துருவ் விக்ரமிற்காகவும் ஒரு சூப்பரான கதையை ரெடி செய்துள்ளாராம். இதில் இம்ப்ரஸ்ஸான துருவ் விக்ரம் கணேஷ் பாபு படத்திற்காக கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்தப் படத்தை லைகா தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 2023 நவம்பரில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், துருவ் விக்ரம் - கணேஷ் பாபு இயக்கும் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக கலக்கி வருகிறார் ஏஆர் ரஹ்மான். சமீபத்தில் கூட கோப்ரா, வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன், பத்து தல, மாமன்னன் என ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியான படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன.

அதேநேரம் முன்னணி இயக்குநர்களான ஷங்கர், லோகேஷ் போன்றவர்கள் ராக் ஸ்டார் அனிருத்திடம் தஞ்சம் அடைந்துவிட்டனர். மேலும், சில சீனியர் இயக்குநர்களும் இப்போது ஏஆர் ரஹ்மான் பக்கம் செல்வதில்லை. அதனால், இளம் இயக்குநர்களுடன் இணைந்து தனது ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்து வருகிறார் ஏஆர் ரஹ்மான். மாரி செல்வராஜ்ஜுடன் மாமன்னன் படத்தில் இணைந்த இசைப்புயல், அடுத்து ஜெயம் ரவியின் ஜீனி படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

இப்படத்தை மிஷ்கினின் அசிஸ்டெண்ட் டைரக்டர் அர்ஜுனன் இயக்கவுள்ளார். அதேபோல், மேலும் சில இளம் இயக்குநர்கள், புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து வரும் ஏஆர் ரஹ்மான், தற்போது கணேஷ் பாபுவின் படத்திற்கும் ஓக்கே சொல்லிவிட்டாராம். இதுகுறித்து விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X