இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மேலும் ஒரு புதுமை… "தா பூயுசர்ஸ்" அறிமுகம்

Recommended Video

A R Rahman says All grace goes to god when he asked about Citizenship Amendment | Tha Futures event

சென்னை : இசை உலகில் முடிசூடா மன்னனாக வலம் வரும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் "தா பூயுசர்ஸ்" ஒருங்கிணைந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ரோஜா படத்தின் சின்ன சின்ன ஆசை பாடலின் மூலம் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். அன்று துவங்கி இன்று வரை ஒரு மிக பெரிய இசை அமைப்பாளராக நிலைத்து நிற்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் இசை அமைத்த மெட்டுக்கள் இன்றளவும் பேசும் பொருளாக உள்ளது.

AR Rahman launches Ta futures

ஹாலிவுட் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கார் விருதை பெற்ற தமிழன் ஏ.ஆர். ரஹ்மான். தன் பாடல்களால் இந்திய திரைப்பட ரசிகர்களை மகிழ்வித்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். எதிலும் தொழில்நுட்பம் புதுமையான இசையை புகுத்தி ரசிகர்களை மகிழ்விப்பதில் இவர் வல்லவர்.

கிராமியப்பாடல்களை இசையமைப்பதிலும் கை தேர்ந்தவர் என்பதை உழவன், கிழக்கு சீமையிலே, கருத்தம்மா போன்ற படங்கள் மூலம் நிரூபித்துள்ளார். தமிழில் ரஹ்மான் இசையமைத்த பல பாடல்களும் பாலிவுட் ரசிகர்களின் கவனம் பெற்று வந்த நிலையில், ரங்கீலா திரைப்படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, இந்தியா முழுவதும் ரசிகர்கள் உருவாகினர்.

AR Rahman launches Ta futures

எப்பொழுதும் புதுமையை ரசிகர்களுக்கு வழங்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்தநாள் முன்னிட்டு அன்று "தா பூயுசர்ஸ்" என்ற ஒருங்கிணைந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அப்போது பேசிய அவர், இது திரைப்பட இசை அல்ல திரைப்பட நட்சத்திரங்களைப் பற்றியது அல்ல என்று கூறினார். இது குழந்தைகளுக்கு ஒரு மாறுப்பட்ட சிந்தனைகளை தூண்டும் விதமாக இது இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்றார்.

AR Rahman launches Ta futures

'தா ஃபியூச்சர்ஸ்' ஒரு வகையான ஆற்றலைத் தூண்டி உருவாக்க வேண்டும், இது தனித்துவமான ஒன்றை உருவாக்கும், இது சென்னை மற்றும் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தும் "என்று திரு ரஹ்மான் கூறினார். இதனை பற்றிய அறிவிப்புக்கள் ஒவ்வொன்றாக பின்னர் வெளிவரும் என்றும் அவர் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X