இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாட ஆசையா.. இதோ உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

இளம் பாடகர்களுக்கு வாய்ப்பளிக்க திட்டமிட்டுள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

சென்னை: இசையில் ஆர்வமுள்ளவர்கள் ரஹ்மானின் இசையில்பாட ஒரு அரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது.

தன்னுடைய இசையில் புதுமைகளை புகுத்தி வரும் ஏஆர்.ரஹ்மான் புதுப் புது பாடகர்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார்.

AR Rahman looking for aspiring singer!

அந்த வகையில் அடுத்ததாக இளம் பாடகர்களுக்கு வாய்ப்பளிக்க திட்டமிட்டுள்ளார். யூட்யூப் இந்தியாவும், ஏஆர்.ரஹ்மானும் இணைந்து திறமையான இளம் பாடகர்களை கண்டெடுக்க திட்டமிட்டுள்ளனர்.

ஏஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ள வலைதளப்பக்கத்திற்கு சென்று, ரஹ்மானின் இசையில் பாட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பெயர், தொடர்பு எண், இ-மெயில் ஐடி மற்றும் உங்களுடைய வீடியோ ஆகியவற்றை பதிவேற்றி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். பாடல் வீடியோ மூன்று நிமிடங்களுக்கு மேல் இருக்கக்கூடாது. தனியாக பாடிய வீடியோ மட்டுமே அனுப்ப வேண்டும். முக்கியமாக பாடும் மொழி இந்தியில் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

விண்ணப்பிக்க விரும்பும் போட்டியாளர்கள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். உங்களுடைய விண்ணப்பங்களை அனுப்ப செப்டம்பர் 25 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

விண்ணப்பிக்கப்படும் போட்டியாளர்களிலிருந்து 100 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு சுற்றுகளுக்குப் பிறகு நான்குபேர் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவார்கள். அதில் தேர்வு பெறும் போட்டியாளர் ஏஆர்.ரஹ்மானின் இசையில் பாடும் வாய்ப்பைப் பெறுவார்.

இந்த நிகழ்ச்சியை க்யூக்கி என்ற நிறுவனம் நடத்துகிறது. நிகழ்ச்சி முழுவதும் மும்பையில் நடைபெறும் என்பதால், தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் மும்பைக்கு செல்ல வேண்டும் என்பதும் கட்டாய விதிகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X