சுஷாந்த் சிங் மறைவு.. இசை அஞ்சலி செலுத்திய ஏ.ஆர். ரஹ்மான்.. ஜூலை 24 ரிலீசாகுது கடைசி படம்!

சென்னை: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான தில் பேச்சாரா நாளை மறு தினம் ஜூலை 24ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

இந்நிலையில், அந்த படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர். ரஹ்மான், தற்போது அந்த படத்தின் இசைக் கலைஞர்களுடன் இணைந்து ஒரு இசை அஞ்சலி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தில் பெச்சாரா படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மான் 9 டிராக்குகளை இசையமைத்துள்ள நிலையில், இதுவரை 4 பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளன.

ரஹ்மான் குடும்பத்துடன்

ரஹ்மான் குடும்பத்துடன்

சென்னையில் தனது ஸ்டூடியோவில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், தில் பேச்சாரா டைட்டில் டிராக்கை தனது மகன் ஏ.ஆர். அமீன் மற்றும் மகள் ரஹீமா ரஹ்மானுடன் இணைந்து பாடும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். பாடலுக்கு முன்பாக, தில் பேச்சாரா படத்திற்கு அமைத்த இசை இன்று வேறு ஒரு பரிமாணத்தில் மாறி உள்ளது எனக் கூறியுள்ளார்.

சுனிதி சவுகான்

சுனிதி சவுகான்

சுஷாந்த் சிங் ராஜ்புத், சஞ்சனா சங்கி நடிப்பில் உருவாகி உள்ள தில் பேச்சாரா படத்தை முகேஷ் சப்ரா இயக்கி உள்ளார். நாளை மறுநாள் இந்த படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இந்த படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இடம்பெற்றுள்ள மஷ்காரி என்ற பாடலை சுனிதி சவுகான் மற்றும் ஹிரிதய் கட்டானி இணைந்து பாடியுள்ளனர். அவர்கள் கொடுத்துள்ள இசை அஞ்சலியும் இந்த வீடியோவில் இணைக்கப்பட்டிருக்கிறது.

Recommended Video

Sushant இறப்பை பயன்படுத்தும் Kangana • Tapsee Strong Reply
ஸ்ரேயா கோஷல்

ஸ்ரேயா கோஷல்

பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷல் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான தில் பேச்சார படத்தில் இடம்பெற்றுள்ள தாரே ஜின் பாடலை மோகித் சவுகான் உடன் இணைந்து பாடியிருக்கிறார். தற்போது ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கியுள்ள இந்த இசை அஞ்சலி ஆல்பத்திற்காக பிரத்யேகமாக பாடி தனது வீடியோவையும் இந்த ஆல்பத்தில் இணைத்துள்ளார்.

கலைஞர்களின் சங்கமம்

டாக்டர் படத்தின் ‘செல்லம்மா' பாடல் படு ஹிட்டாகி வருகிறது. அந்த பாடலை பாடியுள்ள ஜோனிடா காந்தி, ஹிரிதய் கட்டானி, சாஷா திரிபாதி, ஏ.ஆர். ரஹ்மான், ஸ்ரேயா கோஷல் என பல இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு இசை அஞ்சலி செய்துள்ள வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே மில்லியன் வியூக்களை கடந்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X