AR Rahman: ”யாருப்பா இது”... தன்னைத்தானே கலாய்த்துக் கொண்ட ஏஆர் ரஹ்மான்... தலைவர் வேற ரகம் தான்!

சென்னை: கோலிவுட் மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவின் பெருமையாக வலம் வருகிறார் ஏஆர் ரஹ்மான்.

தேசிய விருது முதல் ஆஸ்கர் வரை தடம் பதித்துவிட்ட ஏஆர் ரஹ்மான், இப்போதும் பிஸியாகவே காணப்படுகிறார்.

பத்து தல, பொன்னியின் செல்வன் 2 என இந்தாண்டு அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து இன்னும் சில படங்கள் வரிசைக் கட்டி நிற்கும் நிலையில், ஏஆர் ரஹ்மான் தன்னைத்தானே டிவிட்டரில் கலாய்த்துள்ளார்.

 AR Rahman: Music composer AR Rahman trolled himself on Twitter

தன்னையே ட்ரோல் செய்த ஏஆர் ரஹ்மான்: 1992ம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானர் ஏஆர் ரஹ்மான். அன்று தொடங்கிய இசைப் புயலின் பயணம், 30 ஆண்டுகளை கடந்தும் வேகம் குறையாமல் சுழன்றடித்து வருகிறது. கடந்தாண்டு பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு, இரவின் நிழல், கோப்ரா, இந்தியில் லவ் யூ ஹமேஷா, மிலி, ஹீரோபந்தி, மலையாளத்தில் மலையான்குஞ்சு ஆகிய படங்களுக்கு இசையமைத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்தாண்டு பத்து தல, பொன்னியின் செல்வன் 2 படங்களில் மாஸ் காட்டினார். மேலும், அடுத்தடுத்து மாமன்னன், அயலான் போன்ற படங்களும் வெளியாக உள்ளன. இதனால் 2023ம் ஆண்டிலும் ஏஆர் ரஹ்மான் ரசிகர்களுக்கு மியூசிக்கல் ட்ரீட் காத்திருக்கிறது. படங்களுக்கு இசையமைப்பது, உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் என பிஸியாக இருந்தாலும், சோஷியல் மீடியாவிலும் ரொம்பவே ஆக்டிவாக இருக்கிறார்.

இந்நிலையில், நெட்டிசன் ஒருவரின் டிவிட்டர் போஸ்டை ஷேர் செய்து, தன்னைத்தானே ட்ரோல் செய்துள்ளார் ஏஆர் ரஹ்மான். நெட்டிசனின் டிவிட்டர் பதிவில், "நமக்கெல்லாம் ஒரு நண்பன் இருப்பார், அவர் இந்த உலகத்திலேயே மிக மோசமான நேரத்தில் உறங்கச் செல்வார். சூரியன் உதிக்கும் போது எல்லோரும் எழுந்திருக்கும் நேரம் அவர் மட்டும் படுக்கைக்கு போவார்" என குறிப்பிட்டுள்ளார்.

இதனை ஷேர் செய்துள்ள ஏஆர் ரஹ்மான், "யாருப்பா அது" என ஸ்மைலி கேப்ஷனுடன் டிவிட் போட்டுள்ளார். ஏஆர் ரஹ்மான் எப்போதும் இரவில் தான் இசையமைப்பார். அதனால் அவரை சந்திக்க செல்லும் இயக்குநர்களுக்கு இரவில் தான் அப்பாயின்ட்மெண்ட் கிடைக்குமாம். ரோஜா படத்திற்கு இசையமைக்கத் தொடங்கியது முதலே இரவில் வேலை பார்ப்பதை தான் விரும்புகிறார் ஏஆர் ரஹ்மான்.

 AR Rahman: Music composer AR Rahman trolled himself on Twitter

அதனால், அந்த டிவிட்டரில் நெட்டிசன் குறிப்பிட்டுள்ளது நான் தான் என மறைமுகமாக குறிப்பிட்டு தன்னையே கலாய்த்துள்ளார் ஏஆர் ரஹ்மான். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் ஏஆர் ரஹ்மானை கலாய்த்துள்ளனர். தலைவர் ஏஆர்ஆர் வேற ரகம், அது நீங்க தான் எஜமான் என கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர். அதேபோல், இத்தனை வருசமா உங்களுக்கு இந்த பழக்கம் போகவில்லையா எனவும் கேட்டுள்ளார்.

ஏஆர் ரஹ்மான் தன்னுடன் இருப்பவர்களை அடிக்கடி கலாய்த்துக்கொண்டே இருப்பாராம். இதுபற்றி அவருடன் பணிபுரிந்த பிரபலங்கள் பலமுறை கூறியதும் உண்டு. இந்நிலையில், தன்னைத்தானே ஏஆர் ரஹ்மான் ட்ரோல் செய்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X