AR Rahman Birthday - ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள்.. இசைப்புயலுக்கு இத்தனை கோடி சொத்து மதிப்பா?

சென்னை: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவில் பிரபலமானவர். அவருக்கென பல கோடி பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளில் கலக்கிவரும் அவர்; இன்று தனது 59ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவரும் சூழலில்; ஏ.ஆர்.ரஹ்மானின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

சிறு வயதிலேயே தந்தையை இழந்து பல கஷ்டங்களை சந்தித்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். குடும்பத்தின் பொருளாதாரத்துக்காக படிப்பை விட்டுவிட்டு இசைத்துறைக்குள் வந்த அவர்; இளையராஜா, டி.ராஜேந்தர் உள்ளிட்டோரிடம் பணியாற்றினார். அதனையடுத்து விளம்பர படங்களுக்கு இசையமைத்துவந்த அவர்; மணிரத்னத்தின் இயக்கத்தில் ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் இசையமைத்த பாடல்கள் எல்லாம் பட்டையை கிளப்பின. அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

செம பிஸியான ரஹ்மான்: ரோஜா பட பாடல்கள் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்ததை அடுத்து ஏ.ஆர்.ரஹ்மானின் கொடி உயர பறக்க ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் ராஜாவின் கோட்டையாக இருந்த தமிழ் சினிமாவை; மொத்தமாக பிடித்துவிட்டார். எங்கும் ரஹ்மான் மயமாகவே இருந்தது. தமிழில் அவர் கொடுத்த ஹிட் பாடல்கள் காரணமாக பாலிவுட் கதவுகளும் திறக்க; அங்கேயும் சென்று தனது தடத்தை ஆழமாக பதித்தார் இசைப்புயல்.

AR Rahman Net Worth Revealed on His 59th Birthday Oscar Legend Owns Assets Worth 1 728 Crore
Photo Credit:

ஆஸ்கர் விருதுகள்: கோலிவுட், பாலிவுட் என வளர்ந்த அவருக்கு ஹாலிவுட்டிலும் வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்திக்கொண்ட அவர்; ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு இசையமைத்து கோல்டன் க்ளோப், கிராமி, ஆஸ்கர் விருதுகளை அள்ளினார். ஆஸ்கர் விருது வென்றதிலிருந்து ஆஸ்கர் நாயகன், ஆஸ்கர் தமிழன் என்று கொண்டாடப்படுகிறார். கடைசியாக தமிழில் அவர் காதலிக்க நேரமில்லை, தக் லைஃப் படங்களுக்கு இசையமைத்தார். ஹிந்தியை பொறுத்தவரை தேரே இஷ்க் மெய்ன் படத்துக்கு இசையமைத்திருந்தார்.

இன்று பிறந்தநாள்: அடுத்ததாக அவர் மூன்வாக் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். அப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ஐந்து பாடல்களையும் அவரே பாடவும் செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி நடிகராகவும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார். இதில் பிரபுதேவா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் இன்று ஏ.ஆர்.ரஹ்மான் தனது 59ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். மூன்வாக் திரைப்பட குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் அவர்.

சொத்து மதிப்பு: அவரது பிறந்தநாளையொட்டி பலரும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். சூழல் இப்படி இருக்க ரஹ்மானின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு மொத்தம் 1,728 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு படத்துக்கு 10 கோடி ரூபாய்வரை சம்பளமாக வாங்குகிறாராம். லாஸ் ஏஞ்சல்ஸ், துபாய், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு பங்களா வைத்திருக்கும் அவரிடம், பென்ஸ், ஜாகுவார், போர்ஷ் உள்ளிட்ட சொகுசு கார்களும் இருக்கின்றனவாம். இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. டைம்ஸ் நவ் செய்தி கொடுத்த தரவுகள்படி தொகுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X