ஏ.ஆர். ரஹ்மானும் ஏமாந்துள்ளார்.. எஞ்சாமி பாடல் அய்யோசாமி என ஆக்கி விட்டது.. சந்தோஷ் நாராயணன் பளிச்!

சென்னை: ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஆல்பம் பாடல் உருவாக்குகிறோம் என அறிவு மற்றும் பாடகி தீயை வைத்து உருவாக்கிய என்ஜாய் எஞ்சாமி பாடல் பல மில்லியன் வியூஸ் கடந்தும் எங்களுக்கு அதன் மூலம் கிடைத்தது ஒரு ரூபாய் கூட இல்லை வெறும் ஜீரோ சென்ட்ஸ் தான் என வீடியோ போட்டு பதற வைத்து விட்டார் சந்தோஷ் நாராயணன்.

சந்தோஷ் நாராயணனுக்கும் தெருக்குரல் அறிவுக்கும் இடையே சண்டை வெடிக்க காரணம் அவரை அசிங்கப்படுத்தி விட்டார் என்பதால் மட்டுமல்ல அந்த பாடலுக்கு ஒரு ரூபாய் கூட சம்பளமாக கொடுக்கவில்லை என்பது தான் என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.

AR Rahman not a cheater he is also a victim Santhosh Narayanan clears the air

மஜா எனும் யூடியூப் சேனல் மூலம் இதனை வெளியிட்டனர். அந்த மஜா சேனல் ஏ.ஆர். ரஹ்மான் உடையது. அவர் தான் ஏமாற்றி விட்டார் என பிரச்சனைகள் வெடித்த நிலையில், அதற்கும் சந்தோஷ் நாராயணன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

ஒரு ரூபாய் கூட கிடைக்கல: கடந்த 2021ம் ஆண்டு வெளியான சுதேசி பாடலான என்ஜாய் எஞ்சாமி பாடல் 487 மில்லியன் வியூஸ் கடந்து ஹிட் அடித்தது. ஒரு மில்லியன் வியூஸ் வந்தாலே யூடியூப் பிரபலங்கள் வீட்டில் பணமழை கொட்டி வரும் நிலையில், சந்தோஷ் நாராயணன் அம்பானிக்கே டஃப் கொடுப்பார் போல என பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், அந்த பாடல் மூலம் ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை என்றும் ஒட்டுமொத்தமாக எங்களை ஏமாற்றி விட்டார்கள் என பகீர் கிளப்பும் உண்மையை உடைத்துக் கூறியுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மானும் ஏமாந்துட்டார்: மஜா எனும் யூடியூப் சேனல் மூலம் தான் இந்த பாடலை தயாரித்து சந்தோஷ் நாராயணன் வெளியிட்டு இருந்தார். அதற்காக சில கோடிகளை அவர் செய்தது தான் மிச்சம். ஏ.ஆர். ரஹ்மானின் கம்பெனி தான் மஜா என சொல்லப்பட்ட நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் எப்போதும் எனக்கு பெரிய தூணாக இருப்பவர். இந்த விஷயத்தில் அவரும் ஏமாற்றப்பட்டுள்ளார் என சந்தோஷ் நாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.

என்ன நடக்கிறது?: இசைத்துறையில் முன்னணியில் இருக்கும் ஏ.ஆர். ரஹ்மான், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களே இப்படியொரு பெரிய ஸ்கேமில் எப்படி சிக்கினார்கள் என ரசிகர்கள் ஒரே குழப்பம் அடைந்துள்ளனர். பாடகி தீ மற்றும் அறிவுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்றும் விரைவில் எல்லாம் சரியாகும் என சந்தோஷ் நாராயணன் புதிய ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X