இந்தியன் 2வுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்காதது ஏன்?.. அந்த பிரபலம் தான் காரணமா?.. இப்படி பண்ணிட்டாரே!

சென்னை: இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. ஆனால், ரசிகர்கள் பலரும் இந்தியன் 2 பாடல்களை கொண்டாடுவதற்கு பதிலாக இந்தியன் படத்தின் பாடல்களையும் 28 ஆண்டுகளுக்கு முன்னதாக ஏ.ஆர். ரஹ்மான் இசைத்த இசையை இன்ச் இன்ச்சாக ரசித்து அனிருத்தை போட்டு பொளந்து வருகின்றனர்.

இதெல்லாம் நடக்கும் என்று தெரிந்ததா நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் அனிருத் தற்புகழ்ச்சி பாடாமல் தலைவன் ஏ.ஆர். ரஹ்மான் புகழைப் பாடி உஷாராக தப்பித்துக் கொள்ள நினைத்தார்.

AR Rahman Indian 2 Anirudh Kamal Haasan Shankar 2

ஆனாலும், ஒவ்வொரு முறையும் அந்த ”கதறல்ஸ்” பாடலைக் கேட்கும் போதெல்லாம் ரசிகர்கள் கடுப்பாகி அனிருத்தை விளாசி வருகின்றனர். கடந்த ஆண்டு ஜெயிலர் மற்றும் லியோ படங்களுக்கு அனிருத் இசையமைத்த நிலையில் அவரைக் கொண்டாடிய ரசிகர்கள் அப்படியே தற்போது மாறி உள்ளனர். இந்நிலையில், இந்தியன் 2 படத்துக்கு இசையமைத்தது ஏன் என்கிற கேள்விக்கு ஏ.ஆர். ரஹ்மான் சில வருடங்களுக்கு முன்பாக அளித்த பேட்டி வீடியோ அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

6 ஆண்டுகளுக்கு முன்னதாக: 2.0 படத்தின் பாடல்கள் எந்திரன் படத்தின் பாடல்கள் அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. அப்போது அனிருத்தின் இசை உச்சத்தில் இருந்து வந்த நிலையில், அடுத்ததாக இந்தியன் 2 படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மானை விட்டு விட்டு அனிருத்தை ஷங்கர் தேர்வு செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அனிருத் கடந்த 6 ஆண்டுகளாக பல வெற்றி ஆல்பங்களை கொடுத்து வந்த நிலையில், இந்தியன் 2 ஆல்பம் கொஞ்சம் ஓல்டாகத்தான் இருக்கும். அதனால், தான் இந்தியன் 2 பாடல்கள் பெரிதாக ரசிகர்களை கவராமல் தற்போது ட்ரோல் மெட்டீரியலாக மாறியுள்ளது என்கின்றனர்.

ஏ.ஆர். ரஹ்மான் ஓபன் பேட்டி: அனிருத் இந்தியன் 2 படத்தில் ஒப்பந்தமான சமயத்திலேயே ஏ.ஆர். ரஹ்மானிடம் நீங்கள் ஏன் இந்தியன் 2 படத்துக்கு இசையமைக்கவில்லை என்கிற கேள்வியை ஏ.ஆர். ரஹ்மானிடம் வைத்தனர். அதற்கு பதிலளித்த அவர், கமல் சார் இந்தியன் 2 படத்துக்கு நான் தான் பண்ணணும் என அடிக்கடி என்னை வற்புறுத்திக் கொண்டே இருந்தார். ஆனால், ஷங்கர் சார் என்னை அதுதொடர்பாக அணுகவில்லை. அந்நியன் மற்றும் நண்பன் படங்களுக்கும் அவர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பணியாற்றியுள்ளார். அவருக்கு ஒரே இசையமைப்பாளருடன் பணியாற்றினால் போர் அடித்திருக்கலாம். அவருக்கு ஒரு சேஞ்ச் வேண்டும் என்று கதை ரீதியாக தோன்றிய காரணத்தால் என்னை இந்த படத்துக்கு அழைக்கவில்லை என நினைக்கிறேன் என ஏ.ஆர். ரஹ்மான் அளித்த பதிலை தற்போது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

ஷங்கர் தான் காரணம்: கமல்ஹாசன் இந்தியன் படத்துக்கு வந்தது போலவே ஏ.ஆர். ரஹ்மானை வைத்து பாடல்களை உருவாக்க நினைத்த நிலையில், ஷங்கரின் முடிவு தான் இந்தியன் 2 படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மானுக்கு பதிலாக அனிருத்தை கொண்டு வரவேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது. இந்தியன் 2 படத்தின் கதைக்கு அனிருத்தின் இசை மற்றும் பாடல்கள் சரியாக பொருந்தி போனால் நிச்சயம் இந்தியன் 2 மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும். “பாரா”, “நீலோற்பம்”, “கம்பேக்” இந்தியன் படங்களை அனிருத் தரமாகவே போட்டுள்ளார். “கேலண்டர்” பாடலை வித்தியாசமாக கொடுத்துள்ள அனிருத் “கதறல்ஸ்” பாடலை தர லோக்கலாக கொடுத்து அனைவரையும் வைப் பண்ண வைத்துள்ளார். படம் வெளியான பின்னர் ரசிகர்களின் கருத்து மாறுகிறதா? அல்லது இதைவிட மோசமாக செல்கிறதா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X