AR Rahman: விமானத்தில் விரட்டி விரட்டி புரபோஸ் செய்த நடிகைகள்... AR ரஹ்மான் எடுத்த அதிரடி முடிவு!
சென்னை: ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள மாமன்னன் திரைப்படம் கடந்த 29ம் தேதி வெளியானது.
இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
முன்னதாக மாமன்னன் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஏஆர் ரஹ்மான் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார்.
அதில் நடிகைகள் சிலர் தனக்கு லவ் புரபோஸ் செய்ததாக ஏஆர் ரஹ்மான் கூறியது வைரலாகி வருகிறது.

ஏஆர் ரஹ்மானுக்கு லவ் புரோபஸ் செய்த நடிகைகள்: ரோஜா படத்தில் அறிமுகமான ஏஆர் ரஹ்மான், இன்று இந்திய திரையுலகில் இசைப் புயலாக கலக்கி வருகிறார். 1992ல் தொடங்கிய அவரது இசை பயணம் 30 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தற்போது அவரது இசையில் மாமன்னன் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
மாமன்னனில் இடம்பெற்ற 7 பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களிடம் செம்மையாக ரீச் ஆகியுள்ளது. முக்கியமாக வடிவேலுவை ராசாக் கண்ணு பாடலை பாட வைத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் மியூசிக்கல் ட்ரீட் கொடுத்தார். மாமன்னன் இசை வெளியீட்டு விழா உட்பட பல ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் இந்தப் பாடல் உருவானது குறித்து வடிவேலுவும் செம்ம காமெடியாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மாமன்னன் ப்ரொமோஷன் பேட்டியில் ஏஆர் ரஹ்மான் பேசிய சில காமெடியான சம்பவங்கள் வைரலாகி வருகின்றன. விஜய் டிவி புகழ் மணிமேகலை ஏஆர் ரஹ்மானிடம் சில Thug Life கேள்விகளை கேட்கின்றார். அப்போது சில போட்டோஸ், வீடியோக்களை LED-யில் ப்ளே செய்து கேள்விகள் கேட்டுக் கொண்டே வருகிறார். அதில் ஏஆர் ரஹ்மானின் திருமண போட்டோவும் இடம்பெற்றுள்ளது.
ஏஆர் ரஹ்மானும் அவரது மனைவியும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை காட்டி, ஏதேனும் பிளாஷ்பேக் இருந்தால் சொல்லுங்கள் என மணிமேக லை கேட்க, இசைப் புயலும் செம்மையாக தக் லைஃப் பதில் கொடுத்துள்ளார். 1994ம் ஆண்டு தனது திருமணம் நடைபெற்றது எனக் கூறிய ஏஆர் ரஹ்மான் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். அதாவது 1994ம் ஆண்டிலேயே ஏஆர் ரஹ்மான் முன்னணி இசையமைப்பாளராகிவிட்டார்.
அதனால், அவர் விமானத்தில் செல்லும் போதெல்லாம் பல நடிகைகள் ஜாடை மாடையாக ஏஆர் ரஹ்மானிடம் லவ் புரபோஸ் செய்தார்களாம். இதனால், ஷாக்கான ஏஆர் ரஹ்மான் நேராக தனது அம்மாவிடம் சென்று பெண் பார்க்கும் படி கூறியுள்ளார். திருமணம் செய்யாமல் இருந்தால் தொடர்ந்து பலரும் புரபோஸ் செய்வார்கள், இசையமைப்பதில் கவனம் செலுத்த முடியாது என ஏஆர் ரஹ்மான் ஓபனாக பேசியுள்ளார்.
ஏஆர் ரஹ்மானுக்கும் பல நடிகைகளிடம் இருந்து லவ் புரபோஸ் சென்றுள்ளது ரசிகர்களுக்கு சப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. இந்த வீடியோவை ஏஆர் ரஹ்மான் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து 'தக் லைஃப்' தலைவா என பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











