இசைஞானியின் இசையில் இருந்து தனித்து தெரிய ரகுமானின் பக்காவான ஐடியா.. மொத்த சினிமாவையும் புடிச்சது இப்படிதானா?
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் குறித்து பேச வேண்டும் என்றால் தமிழ் சினிமாவில் இசையில் ஏற்பட்ட மாற்றங்களில் இருந்து பேச வேண்டும். இசைஞானி இளையராஜாவை கடந்த தமிழ் திரை இசை குறித்து பேச வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு இந்திய திரை இசையில், தமிழ் திரை இசையில் மாற்றத்தைக் கொண்டு வந்தவர் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான். 90களில் தனது இசைப் பயணத்தை தொடங்கிய இவர் அப்போது உச்சத்தில் இருந்த இசைஞானி இளையராஜாவின் இசையில் இருந்து முற்றிலும் வித்தியாசமான இசையை கொடுத்தார். அது எப்படி என்பதை சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா கொடிகட்டிப் பறந்து கொண்டு இருந்த நேரத்தில் பல இசையமைப்பாளர்கள் தோன்றினார்கள். ஆனால் யாரும் இளையராஜா அடைந்த உச்சத்தை தொட முடியவில்லை. காரணம், இசைஞானியின் பாடல்கள் மட்டுமில்லாது, பாடல்களில் உள்ள ப்ரீ லூட்ஸ், இண்டர் லூட்ஸ் மற்றும் படத்தில் உள்ள பின்னணி இசை என அனைத்திலும் கொடிகட்டிப் பறந்தார்.
அப்படியான இளையராஜாவை அசைத்துப் பார்த்தார் என்றால் அது இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தான். இவர் இளையராஜாவைப் போல் இசையைக் கொடுக்கவில்லை என்றாலும், அவரது இசை முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால், ரசிகர்களுக்கு புதிவித உணர்வைக் கொடுத்தது. இவரது இசை தமிழ் திரை இசையில் மட்டும் இல்லாமல், இந்திய திரை இசையிலும் மிளிர்ந்தது. இளையராஜா கொடுத்துக் கொண்டு இருந்த இசையில் இருந்து, இவரது இசை முற்றிலும் வித்தியாசமாக, புதுமையாக, ரசனையை அதிகரிக்கச் செய்யக் கூடியதாக இருந்தது.

ரகசியத்தை உடைத்த இசைப்புயல்: இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இப்படி இசையை கொடுக்க காரணம், அவருக்கு தொழில்நுட்பம் நன்றாக தெரிந்துள்ளது. அதில் அவர் புகுந்து விளையாடுகிறார். அதனால்தான் அவரது இசை இந்த அளவிற்கு உலகத் தரத்தில் உள்ளது என்ற பேச்சும் இப்போதும் உள்ளது. தான் எப்படி அப்படியான இசையைக் கொடுத்தேன் என்பது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் ஏ.ஆர். ரகுமான் மனம் திறந்து பேசியுள்ளார். இது பலருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளது.
ரகசியம்: அதாவது இது தொடர்பாக அவர் பேசும்போது, " அந்த காலத்தில் 3டி ஃபேஷியல் பிராசசர் ஒன்று இருந்தது. அது தான் என்னுடைய ரகசிய டூல். அதில் எப்படி என்றால் முகத்தை முன்புறம் வைத்துக் கொள்ளும் போது, ஸ்டிரியோவில் முன்பக்கம் கேட்கும் இல்லையா, முகத்தை பின்புறமாக வைத்தால் பின்னால் கேட்கும். அதை நைஸாக போட்டு விட்டுவிவோம். இன்றைய காலகட்டத்தில் அட்மாஸ் தொழில்நுட்பம் இருப்பதால் அன்று பயன்படுத்தியது தேவையில்லை. ஆனால் அன்றைக்கு ஸ்டிரியோ மட்டும்தான் இருந்தது. எனவே நான் அப்படி பயன்படுத்தினேன்" என்று கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

தக் லைஃப்: இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையில் அடுத்து வெளியாக உள்ள படம் தக் லைஃப். இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்தில் கமல் ஹாசன், சிம்பு, அபிராமி, த்ரிஷா, அசோக் செல்வன், வடிவுக்கரசி. ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை அதாவது மே 24ஆம் தேதி சென்னை புறநகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது.


Click it and Unblock the Notifications











